விசாகதத்தர்
விசாகதத்தன்[1] (Vishakhadatta) (சமக்கிருதம்: विशाखदत्त) சமசுகிருத மொழி கவிஞரும், நாடக எழுத்தாளரும் ஆவார். இவரைப் பற்றிய குறிப்புகள் சிறிதளவே வரலாற்று நூல்களில் கிடைக்கிறது. விசாகத்தன், குப்தப் பேரரசின் காலத்தவர் எனக் கருதப்படுகிறது. விசாகதத்தர் இயற்றிய முத்ரா ராக்ஷஸம் [2] மற்றும் தேவிசந்திரகுப்தம் அரசியல் வரலாற்று நாடக நூல்கள் புகழ்பெற்றது.
முத்திரா ராட்சசம் எனும் நாடக நூலை, 1950 ஆம் ஆண்டில் இ. கே. நடேசசர்மா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது[3].பரிதிமாற் கலைஞர் எனும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், இந்நூலை தமிழில் முத்திராராட்சம் எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். [4]
ஆங்கில மொழி பெயர்ப்பு
தொகுகிலே சமசுகிருத நூலகம், முத்திரா ராட்சம் நூலை, குஜராத்தி மொழியிலிருந்து, ஆங்கில மொழியில் இராட்சசனின் மோதிரம் எனும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ranajit Pal, "Non-Jonesian Indology and Alexander", New Delhi,2002, p. 48.
- ↑ Mudrarakshasa
- ↑ விருபாவில் இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பற்றிய தகவல்
- ↑ முத்திராராட்சசம்
வெளி இணைப்புகள்
தொகு- Clay Sanskrit Library – அதிகாரப்பூர்வ இணைய தளம் பரணிடப்பட்டது 2019-07-07 at the வந்தவழி இயந்திரம்