விசாகா அரசு மகளிர் பட்டக் கல்லூரி
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச மகளிர் ஆண்டான 1975 ஆம் ஆண்டில் விசாகா மகளிர் கல்லூரி சங்கத்தால் பெண்களுக்கென பிரத்யேகமாக ஒரு கல்வி நிறுவனமாக நிறுவப்பட்டதே இந்த விசாகா அரசு மகளிர் பட்டக் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி ஆந்திரப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
படிமம்:Visakha Govt. Degree College For Women.jpg | |
வகை | அரசு மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1975 |
சார்பு | ஆந்திரப் பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை , பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
Superintendent | டி. சீனிவாச ராவ் |
முதல்வர் | முனைவர் எஸ். ஷோபா ராணி |
அமைவிடம் | பழையச்சிறை சாலை, , தாபா கார்டன், விசாகப்பட்டினம் , , 530020 , 17°43′13″N 83°18′15″E / 17.7203°N 83.3043°E |
வளாகம் | Urban |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
வரலாறு
தொகுசுதந்திரப் போராட்ட வீரரும், பரோபகாரியுமான ஸ்ரீ.சிங்கவரபு சூர்யா ராவ் ஆக்கபூர்வமான மற்றும் இடைவிடாத முயற்சியின் விளைவாக, ஒரிசாவின் ஜெய்ப்போரின் ராணி சாஹேபா ரமா குமாரி தேவியின் கோடைகால ஓய்வு விடுதி அரண்மனையான ஹவா மகால் என்ற வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்புப் பெண்களுக்கு கலை மற்றும் வணிகத்தில் பட்டப்படிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதே இக்கல்லூரியாகும்.
1983 ஆம் ஆண்டில், இந்தக் கல்லூரி பெண்களுக்கான விசாகா பட்டக் கல்லூரி மற்றும் பெண்களுக்கான விசாகா இளநிலைக் கல்லூரி என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1992 ஆம் ஆண்டில் அரசாணை GORt.No.2136Edn Dt.22-11-1992 இன் படி இந்த பட்டக் கல்லூரி ஆந்திரப் பிரதேச அரசால் கையகப்படுத்தப்பட்டு தற்போது அரசு கல்லூரியாக இயங்கி வருகிறது. .
அங்கீகாரம்
தொகுஇந்த கல்லூரி NAAC B தர கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகள் பயிற்றுவிக்கப்படும் இக்கல்லூரி, 1999 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் (இந்தியா) சட்டப்பிரிவு 2F மற்றும் 12B இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[3] மேலும் தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் ஏ தரச்சான்றும் வழங்கப்பட்டு மறு அங்கீகாரம் பெற்றுள்ளது. [4] [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "introduction college". visakha abt. 2009-08-11 இம் மூலத்தில் இருந்து 2018-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180611091405/http://www.vgdcw.in/.
- ↑ "ஆந்திரா பல்கலைக்கழகத்தின் இணைந்த கல்லூரிகளின் பட்டியல்".
- ↑ "பல்கலைக்கழக குழுவின் சான்றிதழ்".
- ↑ "NAAC B grade for Visakha Women College". naac.gov.in. 2018-08-12. பார்க்கப்பட்ட நாள் 2018-09-23.
- ↑ "தேசிய மதிப்பீடு சான்றிதழ்".