விசுவநாதன் இரத்தினம்

விசுவநாதன் இரத்தினம் (Viswanathan Ratnam)(பிறப்பு 1 ஆகஸ்ட் 1932-இறப்பு 24 மே 2020)[1] என்பவர் இந்திய நீதிபதி, இமாச்சலப்பிரதேசத்தின் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மற்றும் இமாச்சலப்பிரதேச ஆளுநராகவும் பணியாற்றியவர் ஆவார்.

பணி தொகு

இரத்தினம் 1932-ல் பிறந்தார். இவர் இளநிலை அறிவியல் பட்டமும் இளங்கலைச் சட்டப் பட்டமும் பெற்று, 25 சூலை 1955-ல் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குடிமையியல் மற்றும் தொழிலாளர் விடயங்களில் பயிற்சியைத் தொடங்கினார். இரத்தினம் தமிழ்நாடு சட்ட உதவி வாரியத்தின் செயற்குழு உறுப்பினரானார். 25 சனவரி 1979 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[2] நவம்பர் 15, 1992 முதல், சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பொறுப்பேற்றார். நீதிபதி இரத்னம் 29 ஜனவரி 1994 அன்று இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று ஆகத்து 1, 1994 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.[3] மேலும் இவர் 19 நாட்கள் இமாச்சல பிரதேச ஆளுநராகப் பொறுப்பு வகித்துள்ளார்.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Former Chief Justice of Himachal Pradesh High Court tests positive for COVID-19 after death". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  2. "Former Puisne Judge" (PDF). பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
  3. "Former Chief Justices". hphighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
  4. "GOVERNORS OF HIMACHAL PRADESH". பார்க்கப்பட்ட நாள் 21 January 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாதன்_இரத்தினம்&oldid=3368788" இலிருந்து மீள்விக்கப்பட்டது