விசுவநாத் சகாதேவ்

விஸ்வநாத் சகாதேவ் (Vishwanath Shahdeo) (12 ஆகத்து 1817 - 16 ஏப்ரல் 1858) பர்காகர் ஜமீந்தார் தோட்டத்தின் மன்னராகவும், 1857ஆம் ஆண்டில் நடந்த இந்திய கிளர்ச்சியில் கிளர்ச்சியாளராகவும் இருந்தார் . இவரும் இவரது ஆதரவாளர்களும் ராஞ்சியிலுள்ள பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் ஒரு படையைத் தாக்கி ஆங்கிலேயர்களை தப்பி ஓடச் செய்தனர். இறுதியில் இவர் பிடிபட்டார். தேசத்துரோக குற்றவாளி எனக் குற்றம் சாட்டபட்டு இவரது கூட்டாளிகளுடன் ஒரு மரத்தில் தூக்கிலிடப்பட்டார். [1] [2] [3] [4] [5] [6]

விசுவநாத் சகாதேவ்
தாக்கூர் நாகவன்ஷி
Statue of Thakur Vishwanath Shadeo.jpg
பர்காகாகர் ஜமீந்தார்
முன்னையவர்இரகுநாத் சகாதேவ்
பின்னையவர்மறைந்த தாக்கூர் கபில் நாத் சகாதேவ் »மறைந்த தாகூர் ஜகநாத் நாத் சகாதேவ்» மறைந்த தாக்கூர் தேவேந்திர நாத் சகாதேவ் »மறைந்த தாக்கூர் பாகலேசுவர் நாத் சகாதேவ்» தாகூர் நவின் நாத் சகாதேவ் (தற்போது)
பிறப்புஆகத்து 12, 1817(1817-08-12)
சத்ராங்கி, ராஞ்சி, பர்காகர் தோட்டம்
இறப்பு16 ஏப்ரல் 1858(1858-04-16) (அகவை 40)
ராஞ்சி, பிரித்தானிய இந்தியா
துணைவர்பனேசுவரி குன்வர்
குடும்பம்உறுப்பினர்
  • கபில்நாத் சகாதேவ்
தந்தைஇரகுநாத் சகாதேவ்
தாய்சனேசுவரி குன்வர்

ஆரம்ப கால வாழ்க்கைதொகு

இவர் ஆகத்து 12, 1817 அன்று அப்போதைய லோஹர்தக்காவில் ( தற்போதைய ராஞ்சி மாவட்டம் ) உள்ள பர்காகர் தோட்டத்தின் தலைநகரான சத்ரங்கியில் பிறந்தார். இவர் நாகவன்ஷி குடும்பத்தில் உறுப்பினராக இருந்தார். சோட்டா நாக்பூரின் நாகவன்ஷி மகாராஜாவால் பராமரிப்புக்காக இவரது பெரிய தந்தையான நாதன் ஷாவுக்கு பர்காகர் மாநிலம் வழங்கப்பட்டது. [7]

1857 கிளர்ச்சியில் பங்குதொகு

இவர், பிரிட்டிசாருகக்கும் அவர்களது நிறுவனங்களுக்கும் எதிராக இருந்தார். ஆங்கிலேயர்கள், ராஞ்சியில் தலைமையகத்தையும், தோரண்டாவில் உள்ள ராம்கர் படைப்பிரிவின் இராணுவத் தலைமையகத்தையும் பார்ககர் ஜமீந்தாரின் ஒப்புதல் இல்லாமல் நிறுவினர். பின்னர் ஜெர்மானிய மிஷனரிகள் ஒரு தேவாலயத்தையும் நிறுவினர், இதனால் ஜகந்நாத் கோயிலின் புனிதத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டதாக நம்பப்பட்டது. மேல்லும், பர்காகர் கிட்டத்தட்ட வெளிநாட்டினரால் சூழப்பட்டு நின்றது. அதிகாரிகளின் செயல்பாட்டின் சர்வாதிகார வழியை இவர் விரும்பவில்லை. கிறிஸ்துவர்கள் கோல் பழங்குடியினரின் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியிருந்தனர். கிறிஸ்தவ மிஷனரிகளால் அவர்கள் இதை ஊக்குவித்தனர். இவர் பிரிட்டிசு அதிகாரிகளிடம் புகார் செய்தபோது, அவர்கள் செவிசாய்க்கவில்லை. இவரை புறக்கணித்தனர். [8] தெற்கு பீகாரில் உள்ள கிளர்ச்சியாளர்கள் இவரை வழிநடத்தச் சொன்னார்கள். அவர் இந்த வாய்ப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார். பாண்டே கணபத் ராய், திகாயிட் உம்ராவ் சிங், சேக் பிகாரி, ஜெய்மங்கல் சிங், நாதிர் அலி கான், பிரிஜ் பூசன் சிங், சாமா சிங், சிவா சிங், ராம் லால் சிங் மற்றும் பிஜாய் ராம் உள்ளிட்ட அருகிலுள்ள ஜமீந்தார்களின் உதவியுடன் இவர் ஒரு முக்தி வாகினியை (மக்கள் இராணுவம்) ஏற்பாடு செய்தார். [9]

மேற்கோள்கள்தொகு

  1. "Tributes paid to Pitthoriya martyr Thakur Vishwanth Sahdev". jharkhandstatenews.com.
  2. "Raghubar pays tributes to Thakur Vishwnanth Sahdeo on his birth anniversary". uniindia.com.
  3. "CM pays tribute to Sahdeo on his birth anniversary". avenuemail.com. 2018-11-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-04-08 அன்று பார்க்கப்பட்டது.
  4. "झारखंड के प्रमुख व्यक्तित्व – राजा ठाकुर विश्वनाथ शाहदेव 1817 -1858 ( 16 अप्रैल )". hamarjharkhand.com.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "अमर शहीद ठाकुर विश्वनाथ शाहदेव". vikaspedia.in.
  6. "16 अप्रैल- बलिदान दिवस 1857 के महानायक विश्वनाथ शाहदेव जी. वो योद्धा जो रियासत का राज छोड़ युद्ध किये और प्राप्त की अमरता". dailyhunt.in.
  7. Mathur Das Ustad (1997). "The Role of Bishwanath Sahi of Lohardaga district, During the Revolt of 1857 in Bihar". Proceedings of the Indian History Congress: 493–500. 
  8. Mathur Das Ustad (1997). "The Role of Bishwanath Sahi of Lohardaga district, During the Revolt of 1857 in Bihar". Proceedings of the Indian History Congress: 493–500. 
  9. Mathur Das Ustad (1997). "The Role of Bishwanath Sahi of Lohardaga district, During the Revolt of 1857 in Bihar". Proceedings of the Indian History Congress: 493–500. Mathur Das Ustad (1997). "The Role of Bishwanath Sahi of Lohardaga district, During the Revolt of 1857 in Bihar". Proceedings of the Indian History Congress: 493–500. JSTOR 44143953.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாத்_சகாதேவ்&oldid=3571579" இருந்து மீள்விக்கப்பட்டது