விசேஷ் ரவி
இந்திய அரசியல்வாதி
விசேஷ் ரவி (Vishesh Ravi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் தில்லி சட்டமன்றத்தில் கரோல் பக் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற 2013 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தில்லி அரசின் சுகாதாரத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2015 மற்றும் 2020 தேர்தல்களிலும் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 01 பிப்ரவரி 2017ல் இவர் ஸ்ரீ குரு ரவிதாஸ் விஷ்ராம் தாம் எனும் கோவிலில் இன்னும் 8 இணைகளுடன் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.[2]
விசேஷ் ரவி Vishesh Ravi | |
---|---|
தில்லி சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் பிப்ரவரி 2020 | |
முன்னையவர் | சுரேந்தர் பால் இரத்வால் |
தொகுதி | கரோல் பாக் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஆம் ஆத்மி கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "AAP wrests reserved seats from Congress". Zee News. 10 December 2013. http://zeenews.india.com/assembly-elections-2013/delhi-polls/aap-wrests-reserved-seats-from-congress_895598.html. பார்த்த நாள்: 20 March 2014.
- ↑ http://www.financialexpress.com/india-news/aap-mla-vishesh-ravi-gets-married-in-community-wedding-alongside-electrician-tailor/534751/