விஜயகலா மகேசுவரன்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்

விஜயகலா மகேசுவரன் (Vijayakala Maheswaran, பிறப்பு:23 நவம்பர் 1972) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

விஜயகலா மகேஸ்வரன்
Vijayakala Maheswaran
சிறுவர் விவகாரங்களுக்கான இராசாங்க அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
9 செப்டம்பர் 2015
பெண்கள் விவகாரப் பிரதி அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015 – 17 ஆகத்து 2015
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 நவம்பர் 1972 (1972-11-23) (அகவை 51)
களபூமி, காரைநகர், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
துணைவர்தியாகராஜா மகேஸ்வரன்
வாழிடம்(s)32, 36ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு 6, இலங்கை
வேலைதொழிற்சங்கவாதி

ஆரம்ப வாழ்க்கை

தொகு

விஜயகலா 1972 நவம்பர் 23 அன்று[1] யாழ்ப்பாண மாவட்டம், காரைநகரில் மார்க்கண்டு என்பவருக்குப் பிறந்தவர்.[2] காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[2][3]

விஜயகலா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேசுவரனைத் திருமணம் புரிந்தார். மகேசுவரன் 2008 சனவரி 1இல் அரச துணை இராணுவக் குழுவினரால் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.[4][5] இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[2]

அரசியலில்

தொகு

விஜயகலா தனது கணவரின் படுகொலைக்குப் பிறகு அரசியலில் இறங்கினார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[6] 2015 சனாதிபதித் தேர்தலை அடுத்து இவர் பெண்கள் விவகாரப் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[7][8] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுத்தப்பட்டு 13,071 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார்.[9][10] 2015 செப்டம்பர் 9 இல் இவர் சிறுவர் விவகாரங்களுக்கான இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[11][12][13]

பதவி விலகல்

தொகு

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரளுமன்றத்தில் தமிழர்களின் சுதந்திரத்தைக்காக்க மீண்டும் விடுதலைப்புலிகள் வரவாண்டும் என்று பேசியதால் எழுந்த சர்ச்சையின் காரணமாக தனது பதவியை விட்டு விலகினார்.[14]

மேற்கோள்கள்

தொகு
  1. "Directory of Members: Maheswaran, (Mrs.) Vijayakala". இலங்கை நாடாளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 "தரும பூஷணம் தியாகராஜா மகேஸ்வரன்". p. 25.
  3. "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf. 
  4. டி. பி. எஸ். ஜெயராஜ் (16 மார்ச் 2008). "Assassinating Tamil Parliamentarians: The unceasing waves". தெ நேசன் இம் மூலத்தில் இருந்து 2014-02-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220083850/http://www.nation.lk/2008/03/16/newsfe1.htm. 
  5. "Maheswaran MP assassinated in Colombo". தமிழ்நெட். 1 சனவரி 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24140. 
  6. "Parliamentary General Election - 2010 Jaffna Preferences" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2010-05-13. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21.
  7. "New Cabinet ministers sworn in". டெய்லிமிரர். 12 சனவரி 2015. http://www.dailymirror.lk/61073/new-cabinet-ministers-sworn-in. 
  8. "New Cabinet takes oaths". த நேசன். 12 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150118145912/http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html. 
  9. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  10. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  11. "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1932/69. 18 September 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Sep/1932_69/1932_69%20E.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  12. "New State and Deputy Ministers". டெய்லிமிரர். 9 செப்டம்பர் 2015. http://www.dailymirror.lk/86665/state-and-deputy-ministers. 
  13. "State and Deputy Ministers take oaths (Updated Full List)". த நேசன். 9 செப்டம்பர் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-09-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150910214552/http://nation.lk/online/2015/09/09/state-and-deputy-ministers-take-oaths/. 
  14. "விடுதலைப்புலிகள் திரும்பி வர வேண்டும்"- சர்ச்சையாகப் பேசிய இலங்கை பெண் அமைச்சர் திடீர் ராஜினாமா
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயகலா_மகேசுவரன்&oldid=3571995" இலிருந்து மீள்விக்கப்பட்டது