விஜயப்பூர், பெங்களூர் ஊரகம்
விஜயப்பூர் அல்லது விஜயப்புரா (Vijayapur), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி தாலுக்காவில் அமைந்த சிறு நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது பெங்களூருக்கு வடகிழக்கே 48.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 883 மீட்டர் உயரத்தில் உள்ளது.
விஜயப்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°17′N 77°48′E / 13.29°N 77.8°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | பெங்களூரு ஊரகம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | விஜயப்புரா நகராட்சி |
ஏற்றம் | 883 m (2,897 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 34,866 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 562110 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA |
இணையதளம் | vijayapuratown |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 23 வார்டுகளும், 8,086 வீடுகளும் கொண்ட விஜயப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 34,866 ஆகும். அதில் ஆண்கள் 17,737 மற்றும் பெண்கள் 17,129 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 966 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,625 மற்றும் 1,665 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 69.22%, இசுலாமியர் 29.88 மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India: Search Details". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 12 May 2014.
- ↑ Vijayapura Population, Religion, Caste, Working Data Bangalore Rural, Karnataka - Census 2011