விஜயேந்திர தீர்த்தர்

இந்திய மெய்யியலாளர்

விஜயேந்திர தீர்த்தர் (Vijayindra Tirtha) ( அண். 1514 - அண். 1595) இவர் ஓர் துவைதத் தத்துவஞானியும்,இயங்கியல் நிபுணருமாவார். ஒரு சிறந்த எழுத்தாளரான இவர் இடைவிடாத வாதத் திறமைக் கொண்டவராவார். இவர் துவைத்தின் கொள்கைகளை விளக்கும் 104 கட்டுரைகளை எழுதியுள்ளார் என்றும், வேதாந்தத்தின் சமகால மரபுவழி பள்ளிகளை, பரம்பரை வீரசைவ இயக்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக அதை பாதுகாத்தார் என்றும் கூறப்படுகிறது. தஞ்சை நாயக்கர்களின் ஆட்சியில் கும்பகோணத்திலுள்ள மடத்தின் தலைவராக இருந்த இவர், அத்வைத தத்துவஞானி அப்பைய தீட்சிதருடனும், வீரசைவ எம்மே பசவருடனும் விவாத விவாதங்களில் பங்கேற்றார். [3] அந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், இறையியல் விவாதங்களில் வெற்றி பெற்றதற்காக இவர் பெற்ற கிராமங்களின் மானியங்களை பதிவு செய்துள்ளன. [4] இவர் 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர் என்று வரலாற்றாசிரியர் சர்மா "மீமாஞ்சம், நியாயம் மற்றும் காவிய இலக்கியங்களை உள்ளடக்கிய இவரது சில படைப்புகளிலிருந்து இது தெளிவாகிறது" எழுதுகிறார். [1]

விஜயேந்திர தீர்த்தர்
பிறப்பு1514
இயற்பெயர்விட்டலாச்சாரியர்
சமயம்இந்து சமயம்
தலைப்புகள்/விருதுகள்சர்வ தந்திர சுதந்திரர் [1]
தத்துவம்துவைதம்
குருசுரேந்திர தீர்த்தர், வியாச தீர்த்தர் [2]

படைப்புகள்

தொகு

இவர் 104 இலக்கியப் படைப்புகளுக்கு பெருமை சேர்த்தார். அவற்றில் பல தற்போது இல்லை. முக்கியமாக எஞ்சியவை வியாசதீர்த்தர் (லகு அமோடா), மத்துவர் (தத்வபிரகாசிகா திப்பானி) ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும், அப்பைய்ய தீட்சிதரின் படைப்புகளை மறுக்கும் வேதியியல் படைப்புகள் மற்றும் மீமாஞ்சத்துடன் துவைதத்தின் பொருந்தக்கூடிய சிக்கலைக் கையாளும் பல கட்டுரைகள் அடங்கும். ஒரு சில கவிதைகளும், மூன்று நாடக படைப்புகளும் இவரது கணக்கில் சேரும். [5]

குறிப்பிடத்தக்க படைப்புகள்

தொகு

இவரது 104 படைப்புகளில் அறுபது மட்டுமே உள்ளன. குறிப்பிடத்தக்க சில படைப்புகளைத் தவிர, பல அச்சிடப்படாமல் உள்ளன. கையெழுத்துப் பிரதிகள் நஞ்சன்கூடு, மந்த்ராலயம் மற்றும் கும்பகோணம் போன்ற பல இடங்களிருக்கும் மடங்களில் பாதுகாக்காப்படுகின்றன .

குறிப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Sharma 2000, ப. 172.
  2. Sarma 1937, ப. 551.
  3. Sharma 2000, ப. 165.
  4. Vriddhagirisan 1995, ப. 56.
  5. Sharma 2000, ப. 173-189.

நூலியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயேந்திர_தீர்த்தர்&oldid=3022144" இலிருந்து மீள்விக்கப்பட்டது