விஜி பிரகாஷ்
விஜி பிரகாஷ் (Viji Prakash) என்று பிரபலமாக அழைக்கப்படும் விஜயலட்சுமி பிரகாஷ், என்ற இவர் ஓர் இந்தியாவின் பாரம்பரிய நடனமான பரத நாட்டிய நடனக் கலைஞரும், பயிற்றுவிப்பாளரும், நடன இயக்குனரும் ஆவார். [1] இவர் சக்தி நடன நிறுவனம் மற்றும் பரத நாட்டியத்தின் சக்தி பள்ளி நிறுவனரும் ஆவார். விஜி பிரகாஷ் 1976 முதல் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
விஜி பிரகாஷ் | |
---|---|
பிறப்பு | விஜயலட்சுமி இந்தியா |
பணி | பரதநாட்டியக் கலைஞர் |
விருதுகள் | தேவதாசி தேசிய விருது 2014, கேரள சங்கீத நாடக அகாதமி விருது 2013 |
வலைத்தளம் | |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
விஜி பிரகாஷ் 1977 முதல் அமெரிக்காவில் பரத நாட்டியத்தின் கற்பித்தல், செயல்திறன் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்திவரும் ஒரு முன்னோடி ஆவார். விஜி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தபோது, பரத நாட்டியத்தின் தஞ்சாவூர் பாரம்பரியத்தின் பெரும் நிபுணர்களான, இவரது குருக்களான குரு கல்யாணசுந்தரம் மற்றும் மறைந்த குரு மகாலிங்கம் பிள்ளை ஆகியோரால், 4 வயதிலிருந்தே இவருக்கு வழங்கப்பட்ட தீவிரமான, ஒழுக்கமான, உத்தமமான பயிற்சியையும் சேர்த்தே கொண்டு சென்றார். [2]
பயிற்சி
தொகுதனது இசைக் குழுவுடன் சேர்ந்து, ஐக்கிய அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் யப்பான் ஆகிய நாடுகளில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து, நடன பாரம்பரியத்தை பல்வேறு உலக பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். குரு டாக்டர் கனக் ரெலே மற்றும் நாலந்தா மகா வித்யாலயாவுடன் மோகினியாட்டம் மற்றும் கதகளி ஆகிய முக்கிய பாரம்பரிய நடன வடிவங்களிலும் இவர் பயிற்சி பெற்றார். [3]
லாஸ் ஏஞ்சல்ஸில், விஜி ஒரு நடனப் பள்ளி மற்றும் நிறுவனத்தை நிறுவி, நடனமாடுதல், நடனத்தை இயற்றுதல் மற்றும் நிகழ்சிகளை வழங்குதல் போன்ற பணிகளை தொடங்கினார். சர்வதேச கலைஞர்களுடன் ஒத்துழைத்து100 கட்டாய பாலேக்கள், கியூரேட்டட் விழாக்கள், போன்ற நிகழ்ச்சிகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் கலாச்சார வாழ்க்கையில் மகத்தான பங்களிப்பை வழங்கினார். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தனது வாழ்க்கையில் விஜி 2,000 க்கும் மேற்பட்ட நடன மாணவர்களுக்கு பயிற்சியளித்து வழிகாட்டியுள்ளார். மேலும், 1,000 க்கும் மேற்பட்ட தனி அறிமுக நிகழ்ச்சிகளை (அரங்கேறரம்) நடத்தியுள்ளார். [4]
கௌரவங்கள்
தொகுவிஜி இந்தியாவின் சென்னை மியூசிக் அகாடமியிலிருந்து “சிறந்த குரு” என்ற விருது மற்றும் கற்பித்தல் மற்றும் நடனப் பணிகளில் இவர் செய்த பங்களிப்புக்காக “சூர்யா வாழ்நாள் சாதனையாளர் விருது” உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் / இந்தோனேசியா கலைக்கல்வி உறைவிட கூட்டாளர் திட்டத்தின் மூலம் கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸின் கலாசாரா செயல்திறன் மூலம் கூட்டாளர் விருதினைப் பெற்றுள்ளார். விஜி உலக கலை மற்றும் கலாச்சாரத் துறையில் பரத நாட்டியத்தின் துணை உதவி பேராசிரியராகவும் பணியாற்றினார்.
சக்தி பள்ளி
தொகுவிஜி பிரகாஷ் இந்தியாவின் பாரம்பரிய பரத நாட்டியத்திற்கான "சக்தி பள்ளி" என்ற ஒரு பரதநாட்டியப் பள்ளியை நிறுவி இஅதன் கலை இயக்குநராக உள்ளார். இது தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பரத நாட்டியத்தின் ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். விஜி பிரகாஷ் பரத நாட்டியத்தின் தஞ்சாவூர் பாணியை அதன் அருள் மற்றும் வீரியத்தால் வகைப்படுத்துகிறார். 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பள்ளியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனி நடன அறிமுகங்களை (அரங்கேற்றம்) நிகழ்த்தியுள்ளனர். மேலும், சக்தி நடன நிறுவனத்தின் உறுப்பினர்களாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளன.
குறிப்புகள்
தொகு- ↑ "Roots intact". The Hindu. Archived from the original on 23 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 31 July 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://narthaki.com/info/rev15/rev1776.html
- ↑ https://narthaki.com/info/rev15/rev1776.html
- ↑ https://narthaki.com/info/rev15/rev1776.html
வெளி இணைப்புகள்
தொகு- [1]
- Sri. Rajarajeshwari Bhratanatya kala mandir
- Shakti Dance Company - Official website
- Website of Mythili prakash
- Asia Society, Texas, 'Mythili Prakash', ASTC Presents
- Embassy of the United states, Jakarta and Indonesia, PAU HANA International Workshop of Art Performance Jakarta | 12 February 2009 பரணிடப்பட்டது 2013-02-21 at the வந்தவழி இயந்திரம்
- The Huffington post, My Guru Viji Prakash : 27/03/2012