விடப்பு பாலசுப்ரமணியம்

இந்திய அரசியல்வாதி

விடப்பு பாலசுப்ரமணியம் (Vitapu Balasubrahmanyam) இந்தியாவைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையின் உறுப்பினராகவும், முன்பு அதன் தற்காலிக சபாநாயகராகவும் இருந்தார். [1]

விடப்பு பாலசுப்ரமணியம்
Vitapu Balasubrahmanyam
ஆந்திரப் பிரதேச சட்ட சபை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மார்ச்சு 2007
தொகுதிபிரகாசம்-நெல்லூர்-சித்தூர் ஆசிரியர்கள்
ஆந்திர பிரதேச சட்ட மேலவையின் தலைவர்
பதவியில்
19 சூன் 2021 – 18 நவம்பர் 2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூன் 1950 (1950-06-30) (அகவை 73)
மாமுதுரு கிராமம், செச்செர்லா, நெல்லூர் மாவட்டம், சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிமுற்போக்கு சனநாயக முன்னணி (ஆந்திரப் பிரதேசம்)
துணைவர்சிறீமதி தாதிதோட்டா குமாரி பத்மினி
பெற்றோர்வி. சுப்பைராமய்யா
வாழிடம்(s)நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
வேலைஅரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

விடப்பு பாலசுப்ரமணியம் 1950 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் தேதியன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள மாமுதூர் கிராமத்தில் பிறந்தார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகத்தில் தெலுங்கு மொழியில் எம்.ஏ. படிப்பை முடித்தார்.

அரசியல் வாழ்க்கை தொகு

பாலசுப்ரமணியம் 2007 ஆம் ஆண்டு பிரகாசம்-நெல்லூர்-சித்தூர் ஆசிரியர் தொகுதியில் இருந்து எம்.எல்.சி.பதவிக்காக தனது முதல் தேர்தலில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டில் இரண்டாவது தேர்தலிலும் வெற்றி பெற்றார். [2] 2017 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றார். [3] அவர் ஜூன் 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டார் [4]

மேற்கோள்கள் தொகு

  1. Outlook India (18 June 2021). "Governor appoints pro-tem chairman of AP Legislative Council". outlookindia.com இம் மூலத்தில் இருந்து 20 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210620055922/https://www.outlookindia.com/newsscroll/governor-appoints-protem-chairman-of-ap-legislative-council/2104905. பார்த்த நாள்: 20 June 2021. 
  2. "Independents Win MLC Elections". Full Hyderabad. 17 March 2011. https://news.fullhyderabad.com/hyderabad-news/independents-win-6-council-seats-in-mlc-elections-3900.html. 
  3. Sakshi (21 March 2017). "విఠపు హ్యాట్రిక్‌". Sakshi இம் மூலத்தில் இருந்து 20 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210620060203/https://m.sakshi.com/news/district/teacher-mlc-election-win-as-a-pdf-candidate-460456. பார்த்த நாள்: 20 June 2021. 
  4. 10TV (18 June 2021). "Andhrapradesh: శాసన మండలి ప్రొటెం స్పీకర్‌గా విఠపు బాలసుబ్రహ్మణ్యం". 10TV இம் மூலத்தில் இருந்து 20 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210620060355/https://10tv.in/latest/balasubramanian-is-the-protem-speaker-of-the-ap-legislative-council-239586.html. பார்த்த நாள்: 20 June 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடப்பு_பாலசுப்ரமணியம்&oldid=3786576" இலிருந்து மீள்விக்கப்பட்டது