விண்டோசு ஸ்டோர்

விண்டோசு ஸ்டோர் (Windows Store) மைக்ரோசாப்ட் விண்டோசு இயக்கு தளத்திற்கான ஒரு செயலி களஞ்சியம் ஆகும். விண்டோசு 8 மற்றும் விண்டோசு சர்வர் 2012 மூலம் விண்டோசு ஸ்டோர் 2012ல் பயன்பாடுக்கு வந்தது. இது மெட்ரோ செயலிகளை (Metro-style apps) விநியோகம் செய்ய பிரதான முறையாக இருந்து வந்துள்ளது. விண்டோசு ஸ்டோரில் செயலிகள் இலவசமாகவும் கட்டணத்திற்கும் கிடைக்கும். செயலிகளின் கட்டணம் $0.99 இருந்து $999.99 வரை வேர. விண்டோசு ஸ்டோர் பிப்ரவரி 29, 2012 அன்று விண்டோசு 8 நுகர்வோர் மாதிரி மூலம் முதன்முதலாக பயன்பாட்டிற்கு வந்தது.[1] பின்னர் 2015 இல், விண்டோசு போன் ஸ்டோர், எக்ஸ்பாக்ஸ் வீடியோ மற்றும் எக்ஸ்பாக்ஸ் இசை ஆகிய ஸ்டோர்கள் விண்டோசு ஸ்டோருடன் இனைக்கபட்டன.

விண்டோசு ஸ்டோர்
மைக்ரோசாப்ட் விண்டோசின் ஒரு பாகம்.
Details
வகைApp store
சேர்த்திருக்கும்
இயங்கு தளங்கள்
விண்டோசு 8, Windows Server 2012, Windows 8.1, Windows Server 2012 R2, விண்டோசு 10, Windows 10 Mobile
முன்வந்ததுWindows Marketplace
சேவைப் பெயர்Windows Store Service (WSService)
விளக்கம்Provides infrastructure support for Windows Store. This service is started on demand and if disabled applications bought using Windows Store will not behave correctly.
Related components

மற்ற இயங்குதளங்களிள் உள்ள மேக் ஆப் ஸ்டோர் (Mac App Store) மற்றும் கூகுள் பிளே போல விண்டோசு ஸ்டோரிலும் செயலிகள் உள்ளடக்கத்திற்கு சான்றிதழ் பெற வேண்டும். செயலிகள் விற்பனையில் வரும் வருமானத்தில் 30% மைக்ரோசாப்ட்டை சாரும். ஜனவரி 1, 2015 முன்னர், $25,000 மேல் வருமானம் இருப்பவர்கலுக்கு 20% ஆக குறைக்கபட்டு வந்தது.

மைக்ரோசாப்டின் கூற்றுப்படி செப்டம்பர் 28, 2015 இல், வின்டோஸ் என்டி, விண்டோஸ் போன் மற்றும் இவை இரண்டிலும் வேலை செயும்  யுனிவர்சல் செயலிகள் 669,000 விண்டோசு ஸ்டோரில் உள்ளது.[சான்று தேவை] விளையாட்டு, பொழுதுபோக்கு, புத்தகங்கள் மற்றும் குறிப்பு, மற்றும் கல்வி ஆகிய பிரிவிகளிள் அதிக அளவு செயலிகள் உள்ளன். பெரும்பாலான் பயன்பாடு உருவாக்குனர்கள் 1 செயலி தான் வைத்துள்ளனர்.[2]

உசாத்துணை தொகு

  1. Bright, Peter. "Win 8 app store revealed: more money for devs, beta in late பெப்ரவரி". Ars Technica. Condé Nast. பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2011.
  2. "AppFeds – Windows Store Stats". Archived from the original on 2014-06-22. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்டோசு_ஸ்டோர்&oldid=3578262" இலிருந்து மீள்விக்கப்பட்டது