விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி
விண்ணேற்புக் கல்லூரி(Assumption College), என்பது இந்தியாவின் கேரளாவில் சங்கனாச்சேரியில் 1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெண்கள் கல்லூரி ஆகும்.
வகை | இளங்கலை மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1949 |
சார்பு | மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் |
தரநிர்ணயம் | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) , தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை |
தலைவர் | உயர் அருட்திரு முனைவர்.ஜேம்ஸ் பாலக்கல் |
தலைவர் | அருட்திரு.முனைவர்.தாமஸ் ஜோசப் |
முதல்வர் | அன்னி மேரி ஜோசப் |
அமைவிடம் | , , , 686101 , 9°27′06″N 76°32′16″E / 9.4517112°N 76.537718°E |
மொழி | ஆங்கிலம், மலையாளம் |
இணையதளம் | கல்லூரி இணையதளம் |
பல்வேறு பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை[1] பயிற்றுவிக்கும் இக்கல்லூரியானது, மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரி 2016 ஆம் ஆண்டில் இருந்து தன்னாட்சி கல்லூரி எனும் நிலையை அடைந்தது.[2]
அங்கீகாரம்
தொகுசங்கனாச்சேரி உயர்மறைமாவட்டத்தால் நிர்வகிக்கப்படும் இக்கல்லூரி, கிறிஸ்தவ சிறுபான்மை நிறுவன வகையைச்சேர்ந்ததாகும். பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வின் சட்டப்பிரிவு 2(f) மற்றும் 12B இன் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளதோடு[3], தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் நான்காவது சுழற்சியில் ஏ+ தரத்தை பெற்று மறுஅங்கீகாரம் அடைந்துள்ளதோடு
ISO 9001-2015 சான்றிதழும் பெற்றுள்ளது.
படிப்புகள்
தொகு19 இளங்கலை மற்றும் 9 முதுகலை மற்றும் 2 முனைவர் பட்டப் படிப்புகளில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவரும் இக்கல்லூரியில் இவை தவிர, தொழில் சார்ந்த படிப்புகள், ஏசிஎஸ்ஏடி சான்றிதழ் படிப்புகள், செறிவூட்டல் திட்டங்கள் மற்றும் சமூக தொடர்புக்கான திட்டங்கள் ஆகியவையும் பயிற்றுவிக்கப்படுகிறது.
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்
தொகு- கீது அன்னா ஜோஸ், இந்திய கூடைப்பந்து வீராங்கனை
- மீரா ஜாஸ்மின், மலையாளத் திரைப்பட நடிகை
- காயத்ரி அருண், தொலைக்காட்சி நடிகை
மேற்கோள்கள்
தொகு- ↑ "Courses offered". Assumption College, Changanasserry. Archived from the original on 2 September 2013. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013.
- ↑ "Home page". Assumption College, Changanasserry. Archived from the original on 28 August 2013. பார்க்கப்பட்ட நாள் 31 August 2013.
- ↑ "UGC சட்டம் 1956 இன் பிரிவு 2 (f)& 12(B) இன் கீழ் உள்ள கல்லூரிகள்".