வித்தாலி கீன்ஸ்புர்க்

உருசிய இயற்பியலாளர்

வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் (Vitaly Lazarevich Ginzburg, (உருசியம்: Вита́лий Ла́заревич Ги́нзбург; அக்டோபர் 4, 1916நவம்பர் 8, 2009) என்பவர் உருசியாவைச் சேர்ந்த இயற்பியலாளரும், வானியற்பியலாளரும், நோபல் பரிசு பெற்றவரும் ஆவார். இவர் சோவியத்தின் ஐதரசன் குண்டை உருவாக்கியவர்களில் ஒருவராவார்[1]. இவர் ஈகர் தம்மை அடுத்து இயற்பியல் கழகத்தின் (லேபெடெவ் இயற்பியல் கழகம்) கொள்கை இயற்பியல் துறையின் தலைவராக இருந்தவர்.

வித்தாலி கீன்ஸ்புர்க்
Vitaly L. Ginzburg
பிறப்பு(1916-10-04)அக்டோபர் 4, 1916
மாஸ்கோ, உருசியப் பேரரசு
இறப்புநவம்பர் 8, 2009(2009-11-08) (அகவை 93)
மாஸ்கோ, உருசியா
தேசியம்உருசியா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்லேபெடெவ் இயற்பியல் கல்லூரி
கல்வி கற்ற இடங்கள்மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஈகர் தம்
அறியப்படுவதுபிளாசுமா, superfluidity
விருதுகள்இயற்பியலுக்கான நோபல் பரிசு (2003)
இய்ற்பியலுக்கான ஊல்ஃப் பரிசு (1994/95)

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

வித்தாலி கீன்ஸ்புர்க் 1916 ஆம் ஆண்டில் மாஸ்கோவில் யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1938 ஆம் ஆண்டில் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்று1940 ஆம் ஆண்டில் தனது முனைவர் பட்டத்தையும் பின்னர் 1942 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். 1940 ஆம் ஆண்டில் இருந்து மாஸ்கோவில் உள்ள லேபெடெவ் இயற்பியல் கல்லூரியில் பணியாற்றினார்.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்தாலி_கீன்ஸ்புர்க்&oldid=3257880" இலிருந்து மீள்விக்கப்பட்டது