வினிதா பாலி

  வினிதா பாலி, 1955 ஆம் ஆண்டு இந்தியாவின் பெங்களூருவில் பிறந்த இவர், பிரிட்டானியா தொழில் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த பெண் தொழிலதிபராவார்.[1]

வினிதா பாலி
வினிதா பாலி, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
பிறப்பு11 நவம்பர் 1955 (1955-11-11) (அகவை 69)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தில்லி பல்கலைக்கழகம்
ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை ஆய்வு நிறுவனம் (முதுகலை வணிக மேலாண்மை)
மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம்
பணிபிரிட்டானியா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர்
செயற்பாட்டுக்
காலம்
1980 ஆம் ஆண்டு முதல்

கல்வி

தொகு

1975 ஆம் ஆண்டில், டெல்லி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். பின்னர் ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை ஆய்வு நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை பட்டமும் பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகை பெற்று பயின்றுள்ளார். ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் சிறிது காலம் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.[2]

தொழில்

தொகு

வோல்டாஸ் நிறுவனத்தில் முதன்முதலாக தனது வேலையைத் தொடங்கியுள்ள வினிதா, அங்கு குளிர்பான தொழிற்சின்னமான ரஸ்னாவை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்துவதில் பணியாற்றினார். மேலும் கேட்பரி நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் பதினான்கு ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்., இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அந்நிறுவனத்தின் வியாபாரச்சந்தைகளை விரிவுபடுத்தினார். 1994 ஆம் ஆண்டில், கோகோ கோலா வினிதாவை, அந்நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் இயக்குநராக நியமித்தது, பின்னர் லத்தீன் அமெரிக்காவின் சந்தைப்படுத்தல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்நிறுவனத்தில் பணிபுரிந்த ஒன்பது ஆண்டுகளில், கார்ப்பரேட் வியூக குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[3][4] அவர் 2003 ஆம் ஆண்டில் கோகோ கோலா நிறுவனத்தை விட்டு வெளியேறி, ஜிமான் குழுமத்தின் அட்லாண்டா பணியிடத்தில் முதன்மை மற்றும் வணிக உத்தியின் தலைவராக பணிபுரிந்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில் ஜிமான் குழுமத்தின் இருந்து விலகி, இந்திய உணவு நிறுவனமான பிரிட்டானியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இணைந்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்றுள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ், பிரிட்டானியாவின் வருவாய் மூன்று மடங்கு அதிகரித்து $841 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.[5] 2009 ஆம் ஆண்டு இவருக்கு, எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் ''அந்த ஆண்டுக்கான சிறந்த பெண் தொழிலதிபர்'' என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.[6] அதே ஆண்டில், அவர் பிரிட்டானியா ஊட்டச்சத்து அறக்கட்டளையை நிறுவி, அதன்மூலம் இந்திய பள்ளி மாணவர்களுக்கு வலுவூட்டப்பட்ட பிஸ்கட்களை விநியோகிப்பதன் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவியுள்ளார். இந்த அறக்கட்டளையின் வழியாக அவர் செய்த பணிக்காக கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு விருதையம் வென்றுள்ளார்..[7] 2011 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் தனது பத்திரிகையில் "ஆசியாவின் ஐம்பது சக்தி வாய்ந்த வணிகப் பெண்கள்" பட்டியலில் வினிதாவின் பெயரையும் சேர்த்திருந்தது.[5] மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக்கான உலகளாவிய கூட்டணியின் (GAIN) இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் வினிதா இருந்து வருகிறார்.

 
கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனத்தில் வினிதா பாலி மற்றும் டாக்டர் பாலா

மேற்கோள்கள்

தொகு
  1. Karmali, Naazneen (31 January 2012). "Britannia's Tough Cookie". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
  2. "Management Team: Vinita Bali". Britannia Industries. பார்க்கப்பட்ட நாள் 6 March 2012.
  3. "Vinita Bali". Businessweek. பார்க்கப்பட்ட நாள் 25 October 2011.
  4. "Meet Vinita Bali, Britannia CEO". Rediff.com Money. 8 November 2004.
  5. 5.0 5.1 "Asia's 50 Power Businesswomen: Karen Agustiawan". Forbes. March 2012. https://www.forbes.com/lists/2012/13/power-women-asia-12_Karen-Agustiawan_N2AR.html. 
  6. "ET Awards 2009 winners" Economic Times, 25 August 2009.
  7. "Britannia Industries get CSR Award". The Hindu. 12 December 2010. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-downtown/article947114.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினிதா_பாலி&oldid=4166852" இலிருந்து மீள்விக்கப்பட்டது