வினோத் குப்தா மேலாண்மை பள்ளி
வினோத் குப்தா மேலாண்மை பள்ளி (Vinod Gupta School of Management) இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் கரக்பூரில் உள்ள இ.தொ.க கரக்பூர் வளாகத்தில் 1993ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஓர் மேலாண்மை பள்ளியாகும். இந்திய தொழில்நுட்பக் கழக அமைப்பில் நிறுவப்பட்ட முதலாவதான மேலாண்மை பள்ளி இதுவே ஆகும். இ.தொ.க கரக்பூரின் சீரிய முன்னாள் மாணவரும் வாழ்நாள் சிறப்பு உறுப்பினருமான வினோத் குப்தாவின் முயற்சியால் இந்த பள்ளி நிறுவப்பட்டது.
வினோத் குப்தா மேலாண்மை பள்ளி | |
வகை | கல்வி மற்றும் ஆய்வு மேலாண்மை நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1993 |
கல்வி பணியாளர் | 460 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | எம்பிஏ:204 பட்டமேற்படிப்பு பட்டயம்:34 |
அமைவிடம் | , , |
வளாகம் | 1000 ஏக்கர்கள் |
இணையதளம் | http://www.som.iitkgp.ernet.in/ |
வரலாறு
தொகு1993ஆம் ஆண்டு இ.தொ.க கரக்பூரின் சீரிய முன்னாள் மாணவர் வினோத் குப்தா அளித்த நன்கொடை $2 மில்லியனுடன் இந்திய அரசும் இணையான நிதி அளித்து தங்கள் வணிக நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு தொழில்நுட்பத்தை அறிந்து அதனை பயன்படுத்தும் கல்வியை வருங்கால மேலாளர்களுக்கு வழங்கும் வகையில் வினோத் குப்தா மேலாண்மை பள்ளி, இ.தொ.க கரக்பூர் நிறுவப்பட்டது. இதற்கான கால்கோள் விழா சூலை, 1994இல் அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா தலைமையில் நடைபெற்றது. பின்னர் இந்தப் பள்ளிக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்திற்கு திசம்பர் 1996இல் இடம் பெயர்ந்தது.
மாணவர் விடுதிகள்
தொகுவினோத் குப்தா மேலாண்மைப் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் தங்குமிடங்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த மாணவர் விடுதிகள் மேலாண்மைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமன்றி இந்திய தொழில்நுட்பக் கழக மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த விடுதிகளின் பராமரிப்பு, விடுதி மேலாண்மைக் குழுக்களிடம் உள்ளன.
ஆண்களுக்கான விடுதிகள்
தொகுவித்யா சாகர், சகதீசு சந்திர போசு, மதன் மோகன் மாளவியா ஆகியன இப்பள்ளிக்கான விடுதிகள், இங்கு ஒருவர் அல்லது இருவர் தங்கும் அறைகளாக இருக்கின்றன. இந்த அறைகளில் வழங்கப்பட்டுள்ள இணையச் சேவைக்காக மாணவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
பெண்களுக்கான விடுதிகள்
தொகுசரோஜினி நாயுடு, இந்திரா காந்தி, அன்னை தெரசா, ராணி இலட்சுமிபாய் விடுதிகள் பெண்களுக்கானவை.