வினோ நோகராதலிங்கம்

சுப்பிரமணியம் நோகராதலிங்கம், அல்லது பொதுவாக வினோ நோகராதலிங்கம் (பிறப்பு: சூன் 6, 1963) என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

வினோ நோகராதலிங்கம்
Vino Noharathalingam
வன்னி மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000–2001
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2004
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 7, 1963 (1963-06-07) (அகவை 57)
தேசியம் srilankan Tamil
அரசியல் கட்சி தமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் 37/10 கற்குழி, வவுனியா, இலங்கை
சமயம் இந்து

அரசியலில்தொகு

டெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கத்தைச்ச் சேர்ந்த வினோ நோகராதலிங்கம் அக்டோபர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[1] டிசம்பர் 2001 தேர்தலில் இவர் போட்டியிட்டுத் தேர்வாகவில்லை. ஆனாலும், ஏப்ரல் 2004 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] பின்னர் ஏப்ரல் 2010 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] 2015 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ததேகூ உறுப்பினர்களிடையே ஆறாவதாகத் தெரிவாகி, நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.[4]

மேற்கோள்கள்தொகு

  1. "General Election 2000 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  2. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  3. "Parliamentary General Election - 2010 Vanni Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  4. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லி மிரர். 19-08-2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோ_நோகராதலிங்கம்&oldid=2441371" இருந்து மீள்விக்கப்பட்டது