விபின் பக்சே
விபின் பக்சே (Vipin Buckshey) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண் மருத்துவர் ஆவார். [1] இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ கண் பார்வை மருத்துவராக பணியாற்றினார். [2] இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில் 1955 ஆம் ஆண்டு சூன் மாதம் 3 ஆம் தேதியன்று இல் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை பிராங்க் அந்தோணி பொதுப் பள்ளியில் பயின்றார். பிறகு புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் பார்வை அளவையியலில் பட்டம் பெற்றார். [2] தில்லியிலுள்ள இலாரன்சு மற்றும் மேயோ நிறுவனத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். [3] இங்கு ஒரு கண் மருத்துவ அதிகாரியாக தொடு வில்லைப் பிரிவை நிறுவியதாகக் கூறப்படுகிறது. [2] 2000 ஆம் ஆண்டில், இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. [4]
விபின் பக்சே Vipin Buckshey | |
---|---|
பிறப்பு | 3 சூன் 1955 குவாலியர், மத்தியப் பிரதேசம், இந்தியா |
பணி | கண் மருத்துவர் |
அறியப்படுவது | பார்வை அளவையியல் |
விருதுகள் | பத்மசிறீ |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Practo". Practo. 2014. Archived from the original on 29 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "Visual Aids Centre". Visual Aids Centre. 2014. Archived from the original on 29 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Lawrence and Mayo". Lawrence and Mayo. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.
- ↑ "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 19 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.