வியட்நாம் மாகாணங்கள்
வியட்நாம் 58 மாகாணங்களாகவும் (வியட்நாமியம்: tỉnh) மாகாணத்துக்கு இணையான 5 மாநகராட்சிகளாகவும் (வியட்நாமியம்: தான் போ திரூசு துவோசு திரங் உவோங் (thành phố trực thuộc trung ương)) பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணங்கள் மாவட்டங்களாகவும் (வியட்நாமியம்:குயேன் (huyện)), நகரங்களாகவும் (வியட்நாமியம் தான் போ திரூசு துவோசு தின் (thành phố trực thuộc tỉnh)), மாவட்டநிலை நகர்களாகவும் (வியட்நாமியம்: தி சா (thị xã)) பிரிக்கப்பட்டுள்ளன. பின்னவை குமுகநிலை நகர்களாகவும் (வியாட்நாமியம்: தி திரான் (thị trấn)) அல்லது குமுகங்களாகவும் (வியட்நாமியம்: சா (xã)) பிரிக்கப்பட்டுள்ளன.நடராட்சிகள் ஊரக மாவட்டங்களாகவும் (வியட்நாமியம்:குயேன் (huyện)) நகரக மாவட்டங்களாகவும் (வியட்நாமியம்:குவான் (quận)) பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் நகரக மாவட்டங்கள் சிறகங்களாகப் (வியட்நாமியம்:புவோங் (phường)) பிரிக்கப்பட்டுள்ளன.
ஆட்சிமுறை
தொகுமக்கள் மன்றம்
தொகுவியட்நாமிய மாகாணங்கள் நோய் தோங் நிகான் தாங் எனும் மக்கள் மன்றங்களால் ஆளப்படுகிறது அல்லது கட்டுபடுத்தப்படுகிறது. இவை மாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. மக்கள் மன்ற உறுப்பினர் எண்ணிக்கை அம்மாகாண மக்கள்தொகையைப் பொறுத்து மாகானத்துக்கு மாகாணம் வேறுபடுகிறது. மக்கள் மன்றம் ஒரு மக்கள் குழுவை அமர்த்துகிறது. மக்கள் குழு மாகாண அரசின் செயலுறுப்பாக விளங்குகிறது. வியட்நாம் அரசியல் சூழலின் மிக எளிமைப்படுத்திய ஏற்பாடே இது. மாகாண அரசுகள் நடுவண் அரசுக்குக் கட்டுபட்டவை.
மக்கள் குழு
தொகுஉய்பான் நிகாந்தான் எனப்படும் மக்கள் குழு, மாகாண அரசின் செயலுறுப்பாகும். இது கொள்கைகளை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்புடையதாகும். இது அமைச்சரவைக்குச் சமமானதாகும். மக்கள் குழுவில் ஒரு தலைவரும் ஒரு துணைத்தலைவரும் ஒன்பது முதல் பதினொரு உறுப்பினரும் அமைவர்.
பட்டியலும் புள்ளிவிவரமும்
தொகு2009 ஏப்பிரல் 1 நாள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, வியட்நாமின் மக்கள்தொகை 85,789,573 பேர் ஆகும். மிக உயர்வான மக்கள்தொகை அமைந்த வியட்நாமின் ஆட்சியியல் அலகாக ஓ சி மின் நகரம் விளங்குகிறது. இது நேரடி மையக் கட்டுபாட்டில் உள்ள ஐந்து மாநகரங்களில் ஒன்றாகும். இதில் 7,123,340 மக்கள் வாழ்கின்றனர். அடுத்த மிக உயர்வான மக்கள்தொகை அமைந்த வியட்நாமின் இரண்டாம் ஆட்சியியல் அலகாக மிக அண்மையில் விரிவாக்கம் பெற்ற கனாய் மாநகரம் விளங்குகிறது . இதில் 6,448,837 மக்கள் வாழ்கின்றனர். கனாய் தலைநகர விரிவாக்கத்துக்கு முன்பு, இந்நிலையைத் தாங்கோவா மாகாணம் பெற்றிருந்தது. இதில் 3,400,239 மக்கள் வாழ்ந்துவந்தனர். மிகக் குறைவான வியட்நாமின் ஆட்சியியல் அலகாக பாக்கான் மாகாணம் அமைகிறது. இது வடகிழக்கில் நெடுந்தொலைவில் அமைந்த மலைப்பாங்கான மாகாணம் ஆகும். இங்கு 294,660 மக்கள் வாழ்கின்றனர் . [1]
நிலப் பரப்பில் மிகப் பெரிய மாகாணம் நிகேயான் மாகாணம் ஆகும்; இது வின் மாநகரத்தில் இருந்து சோன்சா ஆற்றுப் பள்ளத்தாக்கு வரை விரவி விரிந்தது ஆகும். நிலப் பரப்பில் மிகச் சிறிய மாக்கணம் பாக்நின் மாகாணம் ஆகும்; இது அடர்மக்கள்தொகையுள்ள சிவப்பாற்றுக் கழிமுகப் படுகையில் உள்ளது.
வியட்நாமின் மாகாணங்கள் 2009 ஆம் ஆண்டு சார்ந்த மக்கள்தொகை, பரப்பளவுடன் கீழே உள்ள பட்டியலில் தரப்படுகிறது.[2]
மாகாணம்/நகரம் | தலைநகரம்/ஆட்சி மையம் | பரப்பளவு (km²) [2] |
மக்கள்தொகை [2] |
அடர்த்தி (/km²) [2] |
% நகரமயம் [2] |
வட்டாரம் |
---|---|---|---|---|---|---|
பாசு கியாங் மாகாணம் | பாசு கியாங் | 3,827.4 | 1,554,131 | 406.1 | 9.4 | வடகிழக்கு |
பாசு கான் மாகாணம் | பாசு கான் | 4,868.4 | 293,826 | 60.4 | 16.1 | வடகிழக்கு |
சாவோ பாங் மாகாணம் | சாவோ பாங் | 6,724.6 | 507,183 | 75.4 | 16.9 | வடகிழக்கு |
கா கியாங் மாகாணம் | கா கியாங் | 7,945.8 | 724,537 | 91.2 | 11.6 | வடகிழக்கு |
இலாங்சோன் மாகாணம் | இலாங்சோன் | 8,331.2 | 732,515 | 87.9 | 19.2 | வடகிழக்கு |
பூத்தோ மாகாணம் | வியட்திரி | 3,528.4 | 1,316,389 | 373.1 | 15.8 | வடகிழக்கு |
குவாங் நின் மாகாணம் | காலோங் | 6,099.0 | 1,144,988 | 187.7 | 51.9 | வடகிழக்கு |
தாய் நிகுயேன் மாகாணம் | தாய் நிகுயேன் | 3,546.6 | 1,123,116 | 316.7 | 25.6 | வடகிழக்கு |
துயேன் குவாங் மாகாணம் | துயேன் குவாங் | 5,870.4 | 724,821 | 123.5 | 13.0 | வடகிழக்கு |
இலாவோசாய் மாகாணம் | இலாவோசாய் | 6,383.9 | 614,595 | 96.3 | 21.0 | வடகிழக்கு |
யேன்பாய் மாகாணம் | யேன்பாய் | 6,899.5 | 740,397 | 107.3 | 18.8 | வடகிழக்கு |
தியேன் பியேன் மாகாணம் | தியேன் பியேன் பூ | 9,562.5 | 490,306 | 51.3 | 15.0 | வடகிழக்கு |
கோவாபின் மாகணம் | கோவாபின் | 4,684.2 | 785,217 | 167.6 | 15.0 | வடமேற்கு |
இலாய்சாவு மாகாணம் | இலாய்சாவு | 9,112.3 | 370,502 | 40.7 | 14.2 | வடமேற்கு |
சோன்லா மாகாணம் | சோன்லா | 14,174.4 | 1,076,055 | 75.9 | 13.8 | வடமேற்கு |
பாசுநின் மாகாணம் | பாசுநின் | 823.1 | 1,024,472 | 1,244.7 | 23.5 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
நாநாம் மாகணம் | பூலை | 859.7 | 784,045 | 912.0 | 9.5 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
காய் துவோங் மாகாணம் | காய் துவோங் | 1,652.8 | 1,705,059 | 1,031.6 | 19.0 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
கூங்யேன் மாகாணம் | கூங்யேன் | 923.5 | 1,127,903 | 1,221.3 | 12.1 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
நாம்தின் மாகாணம் | நாம்தின் | 1,650.8 | 1,828,111 | 1,107.4 | 17.6 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
நின்பின் மாகாணம் | நின்பின் | 1,392.4 | 898,999 | 645.6 | 17.9 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
தாய்பின் மாகாணம் | தாய்பின் | 1,546.5 | 1,781,842 | 1,152.1 | 9.7 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
வின்பூசு மாகாணம் | வின்யேன் | 1,373.2 | 999,786 | 728.1 | 22.4 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
கனாய் நகரம் | கொவான் கியேம் மாவட்டம் | 3,119.0 | 7,331,909 | 2,068.6 | 41.0 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
காய்போங் நகரம் | கோங்பாங் மாவட்டம் | 1,520.7 | 1,976,173 | 1,208.1 | 46.1 | சிவப்பு ஆற்றுக் கழிமுகப் படுகை |
காதின் மாகாணம் | Hà Tĩnh | 6,026.5 | 1,227,038 | 203.6 | 14.9 | வடக்கு நடுவண் கடற்கரை |
நிகேயான் மாகாணம் | வின் | 16,498.5 | 2,912,041 | 176.5 | 12.9 | வடக்கு நடுவண் |
குவாங் பின் மாகாணம் | தோங்கோய் | 8,065.3 | 844,893 | 104.8 | 15.0 | வடக்கு நடுவண் கடற்கரை |
குவாங்திரி மாகாணம் | தோங்கா | 4,760.1 | 598,324 | 125.7 | 27.4 | வடக்கு நடுவண் கடற்கரை |
தாங்கோவா மாகாணம் | தாங்கோவா | 11,136.3 | 3,400,595 | 305.4 | 10.4 | வடக்கு நடுவண் கடற்கரை |
தூவதியேன் – குயே மாகாணம் | குயே | 5,065.3 | 1,087,420 | 214.7 | 36.0 | வடக்கு நடுவண் கடற்கரை |
தாக்லாக் மாகாணம் | புவான்மா துவோத் | 13,139.2 | 1,733,624 | 131.9 | 24.0 | நடுவண் மேட்டுச் சமவெளி |
தாக்நோங் மாகாணம் | கியா நிகியா | 6,516.9 | 489,382 | 75.1 | 14.7 | நடுவண் மேட்டுச் சமவெளி |
கியாலாய் மாகாணம் | பிளேய்க்கு | 15,536.9 | 1,274,412 | 82.0 | 28.6 | நடுவண் மேட்டுச் சமவெளி |
கோந்தும் மாகாணம் | கோந்தும் | 9,690.5 | 430,133 | 44.4 | 33.5 | நடுவண் மேட்டுச் சமவெளி |
இலாம்தோங் மாகாணம் | தாலத்து | 9,776.1 | 1,187,574 | 121.5 | 37.8 | நடுவண் மேட்டுச் சமவெளி |
பிந்தின் மாகாணம் | குவிநிகோன் | 6,039.6 | 1,486,465 | 246.1 | 27.7 | தெற்கு நடுவண் கடற்கரை |
பிந்துவான் மாகாணம் | பாந்தியேத்து | 7,836.9 | 1,167,023 | 148.9 | 39.3 | தெற்கு நடுவண் கடற்கரை |
காங்கோவா மாகாணம் | நிகா திராங் | 5,217.6 | 1,157,604 | 221.9 | 39.9 | தெற்கு நடுவண் கடற்கரை |
நிந்துவான் மாகாணம் | பான்றாங்–தாப்சாங் | 3,363.1 | 564,993 | 168.0 | 36.1 | தெற்கு நடுவண் கடற்கரை |
பூயேன் மாகாணம் | துய்கோவா | 5,060.6 | 862,231 | 170.4 | 21.8 | தெற்கு நடுவண் கடற்கரை |
குவாங்நாம் மாகாணம் | தாம்கை | 10,438.3 | 1,422,319 | 136.3 | 18.6 | தெற்கு நடுவண் கடற்கரை |
குவாங் நிகாய் மாகாணம் | குவாங் நிகாய் | 5,152.7 | 1,216,773 | 236.1 | 14.6 | தெற்கு நடுவண் கடற்கரை |
தாநாங் நகரம் | காய் சாவு மாவட்டம் | 1,257.3 | 887,435 | 705.8 | 86.9 | தெற்கு நடுவண் கடற்கரை |
பாரியா–வூங்தாவு மாகாணம் | பாரியா | 1,989.6 | 996,682 | 500.9 | 49.9 | தெற்கு நடுவண் கடற்கரை |
பின் துவோங் மாகாணம் | தூதாவு மோத் | 2,696.2 | 1,481,550 | 549.5 | 29.9 | தென்கிழக்கு |
பின் பூவோசு மாகாணம் | தோங்கோவாய் | 6,883.4 | 873,598 | 126.9 | 16.5 | தென்கிழக்கு |
தோங்நாய் மாகாணம் | பியேங்கோவா | 5,903.9 | 2,486,154 | 421.1 | 33.2 | தென்கிழக்கு |
தாய்நின் மாகாணம் | தாய்நின் | 4,035.9 | 1,066,513 | 264.3 | 15.6 | தென்கிழக்கு |
ஓ சி மின் நகரம் | மாவட்டம் 1 | 2,095.1 | 8,262,864 | 3,418.9 | 83.3 | தென்கிழக்கு |
ஆங்கியாங் மாகாணம் | உலோங்சுயேன் | 3,536.8 | 2,142,709 | 605.8 | 28.4 | மேகாங் கழிமுகப் படுகை |
பாசுலியேயு மாகாணம் | பாசுலியேயு | 2,584.1 | 856,518 | 331.5 | 26.1 | மேகாங் கழிமுகப் படுகை |
பேந்திரே மாகாணம் | பேந்திரே | 2,360.2 | 1,255,946 | 532.1 | 9.9 | மேகாங் கழிமுகப் படுகை |
சாமவு மாகாணம் | சாமவு | 5,331.7 | 1,206,938 | 226.4 | 20.4 | மேகாங் கழிமுகப் படுகை |
தோங்தாப் மாகாணம் | சாவோலான் | 3,376.4 | 1,666,467 | 493.9 | 17.8 | மேகாங் கழிமுகப் படுகை |
நாவு கியாங் மாகாணம் | வி தான் | 1,601.1 | 757,300 | 473.0 | 19.6 | மேகாங் கழிமுகப் படுகை |
கியேங்கியாங் மாகாணம் | இராச்கியா | 6,348.3 | 1,688,248 | 265.9 | 27.0 | மேகாங் கழிமுகப் படுகை |
உலோங்கான் மாகாணம் | தானான் | 4,493.8 | 1,436,066 | 319.6 | 17.4 | மேகாங் கழிமுகப் படுகை |
சோசுதிராங் மாகாணம் | சோசுதிராங் | 3,312.3 | 1,292,853 | 390.3 | 19.4 | மேகாங் கழிமுகப் படுகை |
தியேங்கியாங் மாகாணம் | மூத்தோ | 2,484.2 | 1,672,271 | 673.2 | 13.7 | மேகாங் கழிமுகப் படுகை |
திராவின் மாகாணம் | திராவின் | 2,295.1 | 1,003,012 | 437.0 | 15.3 | மேகாங் கழிமுகப் படுகை |
வின்லோங் மாகாணம் | வின்லோங் | 1,479.1 | 1,024,707 | 692.8 | 15.3 | மேகாங் கழிமுகப் படுகை |
சாந்தோ நகரம் | நின்கியேயு மாவட்டம் | 1,401.6 | 1,188,435 | 847.9 | 65.9 | மேகாங் கழிமுகப் படுகை |
வட்டாரங்கள்
தொகுவியட்நாம் அரசு அனைத்து மாகாணங்களையும் எட்டு வட்டாரங்களாக அல்லது மண்டலங்களாகப் பிரித்துள்ளது. ஆனால், இந்த வட்டாரங்கள் எப்போதும் பயன்படுத்துவது இல்லை; எனவே மாற்று வகைபாடும் கூட இயல்வதே. வட்டாரங்களின் புள்ளி விவரங்கள் உரிய மாகாணங்கள் வாரியாக கீழே தரப்படுகின்றன.
புவியியல் வட்டாரம் | ஆட்சியியல் வட்டாரம் | உள்ளடங்கும் மாகாணங்கள் | பரப்பளவு (கிமீ²) | மக்கள்தொகை (2015)[3] | மக்கள்தொகை அடர்த்தி (மக்கள்/ கிமீ²) |
குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
வடக்கு வியட்நாம் (பாசுபோ மியேன் பாசு) | வடமேற்கு (தாய் பாசுபோ) | 44,301.10 | 4,446,800 | 100.37 | இதில் வியட்நாமின் வடக்குப் பகுதிக்கு மேற்கேயுள்ள மாகாணக்கள் உள்ளன. இவற்றில் இரண்டு மாகாணங்கள் இலாவோசு எல்லையில் அமைகின்றன. மூன்று மாகாணங்கள் சீனாவின் எல்லையில் அமைகின்றன. இவற்றில் ஒன்று சீன எல்லையில் அமைகிறது. தியேன் பியேன் மாகாணம் இலாவோசு எல்லையிலும் சீனாவின் எல்லையிலும் அமைகின்றன. | |
வடகிழக்கு (தோங் பாசுபோ) | 50,684.10 | 8,568,200 | 169.05 | இதில் மக்கள் தொகை உயர்வாகவுள்ள சிவப்பு ஆற்றுத் தாழ்நிலச் சமவெளிக்கு வடக்கே அமைந்த பெரும்பாலான மலைசார் மாகாணங்கள் உள்ளன. இவற்றில் நான்கு மாகாணங்கள் சீனாவின் எல்லையில் அமைகின்றன. | ||
சிவப்பாற்றுக் கழிமுகப் படுகை (தோங்பாங் சோங்கோங்) | 14,957.70 | 19,714,300 | 1,318.00 | இதில் தேசியத் தலைநகரமாகிய கனாய் உட்பட, சிவப்பு ஆற்றைச் சுற்றியமைந்த மக்கள்தொகை உயர்வாகவுள்ள 9 மாகாணங்களும் கைபோங் நகராட்சியும் உள்ளன. இதில் அமைந்த மாநகராட்சிகளாகிய கனாயும் கைபோங்கும் எந்த மாகாண ஆட்சியிலும் அடங்க மாட்டா. இது வேறு எந்த நாட்டு எல்லையையும் பகிராத உள்நாட்டு வட்டாரமாகும். | ||
நடுவண் வியட்நாம் (திரங்போ, மியேன்திரங்) | நடுவண் வடக்குக் கடற்கரை (பாசு திரங்போ) | 51,455.60 | 10,472,900 | 203.53 | . இதில் வியட்நாமின் குறுகிய நடுவண் பகுதியின் வடக்குப் பகுதியில் ஆறு மாகாணங்கள் உள்ளன. அனைத்து மாகாணங்களும் கிழக்கே கடற்கரையில் இருந்து மேற்கே இலாவோசு வரை நீள்கின்றன. | |
நடுவண் தெற்குக் கடற்கரை (துயேங்கை நாம்திரங்போ) | 44,376.80 | 9,185,000 | 206.98 | இதில் வியட்நாம் நடுவண் பகுதியின் தெற்கே அமைந்த எட்டு கடற்கரை மாகாணங்கள் உள்ளன. வியட்நாம் இப்பகுதியில் வடக்கு நடுவண் கடற்கரை வட்டாரத்தை விட அகலமாக அமைகிறது. எனவே இங்கு உள்நாட்டுப் பகுதிகளும் தனி மாகாணங்களாக அமைகின்றன. இவ்வட்டாரத்தில் தற்சார்பான தா நாங் மாநகராட்சியும் அமைந்துள்ளது. இதில் ஒரு மாகாணம் இலாவோசு எல்லையில் அமைகிறது. | ||
நடுவண் மேட்டுச் சமவெளி (வியட்நாம்) (தாய் நிகுயேன்) | 54,641.00 | 5,607,900 | 102.63 | இதில் தெற்கு நடுவண் வியட்நாமின் மலைசார்ந்த ஐந்து உள்நாட்டு மாகாணங்கள் உள்ளன. இங்கு கணிசமான பல்வகைச் சிறுபான்மை இனக்குழு பழங்குடி மக்களே வாழ்கின்றனர். இங்கே பல வியட் இனக்குழு மக்களும் வாழ்கின்றனர். இவற்றில் ஒருமாகாணம் இலாவோசு எல்லையில் உள்ளது; நான்கு மாகாணங்கள் கம்போடியா எல்லையில் உள்ளன. கோன் தும் இலாவோசு எல்லையையும் கம்போடிய எல்லையையும் பகிர்கிறது. | ||
தென்வியட்நாம் (நாம்போ, மியேன்நாம்) | தென்கிழக்கு (தோங் நாம்போ, மியேன் தோங்) | 23,590.70 | 16,127,800 | 683.65 | இதில் மேகாங் கழிமுகப் படுகைக்கு வடக்கே உள்ள தென்வியட்நாம் தாழ்நிலப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் ஏழு மாகாணங்களும் ஓ சி மின் நகர நகராட்சியும் (முந்தைய சாய்கோன் நகரம்) அமைந்துள்ளன. இவற்றில் இருமாகாணங்கள் கம்போடியா எல்லையில் அமைகின்றன. | |
மேகாங் ஆற்றுக் கழிமுகப் படுகை (தோங்பாங் சோங்சூவுலோங்) அல்லது தென்மேற்கு (தாய்நாம்போ, மியேன் தாய்) |
40,576.00 | 17,590,400 | 434.00 | இது வியட்நாமில் மிகத் தெற்கே உள்ள வட்டாரமாகும். இதில் 12 மிகச் சிறிய ஆனால் மக்கள்தொகை மிக்க மேகாங் கழிமுகப் படுகை சார்ந்த மாகாணங்களும் சாந்தோ எனும் தற்சார்பான மாநகராட்சியும் உள்ளன. இது தாய்நாம் போ எனும் தென்மேற்கு வட்டாரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மாகாணங்கள் கம்போடியா எல்லையில் அமைகின்றன. |
^† மாநகராட்சி (தான்போதிரூசு துவோசுதிரங் உவோங்)
வியட்நாமின் வரலாற்றுநிலை மாகாணங்கள்
தொகு- நாநாம் நின் (Hà Nam Ninh). இது மூன்று மாகாணங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை, நாநாம் மாகாணம், நாம்தின் மாகாணம், நாம்பின் மாகாணம் என்பனவாகும்.
- நாசோன் பின் (Hà Sơn Bình). இது நாதாய் மாக்கணம், நோவாபின் மாகாணம் எனப் பிரிக்கப்படுகிறது. பின்னர் 2008 ஆகத்து 1 இல் நாதாயும் நோவா பின்னின் 4 இனமக்களும் விரிவாக்கிய தலைநகராகிய நாநோயின் பகுதியாகின
- நாபாசு மாகாணம் (Hà Bắc). இது பாசுகியாங் மாகாணம், பாசுநின் மாகாணம் எனப் ப்ரிக்கப்படுகிறது
- சாவு தோசு (Châu Đốc)
- வின்லோங் (Vĩnh Long) அல்லது உலோங்கோ (Long Hồ)
- நிகேதின் (Nghệ Tĩnh). இது நிகேயான் மாகாணம், நாதின் மாகாணம் எனப் பைரிக்கப்படுகிறது. பின்னது நிகேதின் சோவியட் குடியரசாக 1930 இல் அறிவிக்கப்பட்டு 1931 வரை நடைமுறையில் இருந்தது. இது மிக்க் குறுகிய காலமே பிரெஞ்சு குடியேற்ற ஆட்சியின்போது எதிர்த்துநின்ற குடியரசாகும்.
- மின் நாய் (Minh Hai). இது சாமவு மாகாணம், பாசுலியேயு மாகாணம் எனப் பிரிக்கப்படுகிறது.
- வின்பூ மாகாணம் (Vĩnh Phú). இது வின்பூசு மாகாணம், பூதோ மாகாணம் எனப் பிரிக்கப்படுகிறது.
- நாதாய் மாகாணம் (Hà Tây). இது 2008 ஆகத்து 1 இல் நாநோய் எனும் கனாய் நகரத்துடன் இணைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2017-12-05.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 General Statics Office of Vietnam
- ↑ General Statistics Office (2017): Statistical Yearbook of Vietnam 2015. Statistical Publishing House, Hanoi
வெளி இணைப்புகள்
தொகு- CityMayors.com article
- (ஆங்கிலம்) (சீனம்) Comprehensive Map of Vietnam’s Provinces c. 1890