விலங்குப் பரிசோதனை

(விலங்கு ஆராய்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விலங்குப் பரிசோதனை (ஆங்கிலம்: animal testing) அல்லது விலங்குச் சோதனை அல்லது விலங்கு ஆராய்ச்சி (animal research) என்பது ஆய்வின் கீழ் வைக்கப்படும் உயிரியல் அமைப்பின் செயற்பாட்டை பாதிக்கும் மாறிகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் சோதனைகளில் மனிதரல்லாத விலங்குகளைப் பயன்படுத்துவதாகும். சுருக்கமாகச் சொன்னால் மனிதத் தேவைகளுக்காக மனிதரல்லாத விலங்குகளின் உயிருள்ள உடலினை ஆய்வுக்கு உட்படுத்துவதாகும். வலியச் சென்று விலங்குகளை வற்புறுத்திச் செய்யப்படும் இந்த அணுகுமுறையானது விலங்குகளை அவற்றின் இயற்கையான சூழல் அல்லது வாழ்விடங்களில் இயல்பாக வாழவிட்டு அதைத் தொலைவிலிருந்து கண்காணிக்கும் கள ஆய்வுகளோடு முரண்படுவதாகும். விலங்குப் பரிசோதனைகள் பொதுவாக பல்கலைக்கழகங்கள், மருத்துவப் பள்ளிகள், மருந்து நிறுவனங்கள், பாதுகாப்புத் துறை நிறுவனங்கள், தொழிற்துறைக்கு விலங்குப் பரிசோதனை சேவைகளை வழங்கும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றால் நடத்தப்படுகிறது.[1] விலங்குப் பரிசோதனையின் நோக்கமானது ஒரு உயிரினத்தைப் பற்றிய அடிப்படை அறிவியலை வளர்க்கும் நோக்கில் செய்யப்படும் வெறும் கோட்பாட்டு ஆராய்ச்சியில் (theoretical research) துவங்கி நோய்களுக்கான சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்களுககுத் தீர்வு காண முயலும் பயன்பாட்டு ஆராய்ச்சி (applied research) வரை ஒரு நிறமாலையாக விரிந்து காணப்படுகிறது. பயன்பாட்டு ஆராய்ச்சியின் எடுத்துக்காட்டுகளில் நோய்களுக்கான சிகிச்சை முறைகளை சோதித்தல், இனப்பெருக்கம், பாதுகாப்பு ஆராய்ச்சி, அழகுசாதனப் பொருட்களை உள்ளடக்கிய நச்சுயியல் பரிசோதனை ஆகியவை அடங்கும். கல்வியியலில் விலங்குப் பரிசோதனை என்பது பொரும்பாலும் உயிரியல் அல்லது உளவியல் மேற்படிப்புகளின் ஒரு அங்கமாகத் திகழ்கிறது.[2] இந்த நடைமுறை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு அளவுகளில் சட்டதிட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.[3]

விஸ்டர் பரிசோதனைக்கூட எலி
விவரிப்புஆண்டுக்கு சுமார் 50 முதல் 100 மில்லியன் முதுகெலும்பிகள் அறிவியல் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
தொடர்புடையத் துறைகள்விலங்குப் பரிசோதனை, அறிவியல், மருத்துவம், விலங்கு நலம், விலங்குரிமை, நெறிமுறைக் கல்வி

2010-ம் ஆண்டுக் கணக்கின்படி ஜீப்ராஃபிஷ் எனப்படும் மீன் முதலாக முதனி வகை விலங்கினங்கள் வரை விலங்குப் பரிசோதனைகளில் முதுகெலும்புள்ள விலங்குகளின் வருடாந்திரப் பயன்பாடு 10 முதல் 100 மில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[4] ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் விலங்குகளில் முதுகெலும்புள்ள விலங்கினங்களின் எண்ணிக்கை 93% ஆகும்.[5] மேலும் 2011-ம் ஆண்டு மட்டும் 11.5 மில்லியன் விலங்குகள் விலங்குப் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன.[6] ஒரு மதிப்பீட்டின்படி, 2001-ல் அமெரிக்காவில் மட்டும் பரிசோதனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட எலிகளின் எண்ணிக்கை 80 மில்லியன் ஆகும்.[7] 2013-ம் ஆண்டின் அறிக்கையின் படி ஆராய்ச்சி விலங்குகளில் எலிகள் உள்ளிட்ட பாலூட்டிகள், மீன்கள், நீர்நில வாழ்வன, ஊர்வன ஆகியவற்றின் பங்கு 85%-க்கும் அதிகமானது என்று அறியப்படுகிறது.[8] 2022-ம் ஆண்டு, அனைத்து மருந்துகளும் விலங்குகளின் மீது பரிசோதிக்கப்பட வேண்டும் என்ற ஐநா உணவு மற்றும் மருந்து அமைப்பான FDA-வின் தேவையை நீக்கும் சட்டமொன்று அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.[9]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ""Introduction", Select Committee on Animals in Scientific Procedures Report". UK Parliament. பார்க்கப்பட்ட நாள் 2012-07-13.
  2. Hajar, Rachel (2011). "Animal Testing and Medicine". Heart Views 12 (1): 42. doi:10.4103/1995-705X.81548. பன்னாட்டுத் தர தொடர் எண்:1995-705X. பப்மெட்:21731811. 
  3. Festing, Simon; Wilkinson, Robin (June 2007). "The ethics of animal research. Talking Point on the use of animals in scientific research". EMBO Reports 8 (6): 526–530. doi:10.1038/sj.embor.7400993. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-221X. பப்மெட்:17545991. 
  4. Meredith Cohn (26 August 2010). "Alternatives to Animal Testing Gaining Ground," The Baltimore Sun.
  5. Taylor, Katy; Alvarez, Laura Rego (2019). "An Estimate of the Number of Animals Used for Scientific Purposes Worldwide in 2015". Alternatives to Laboratory Animals (SAGE Publications) 47 (5–6): 196–213. doi:10.1177/0261192919899853. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-1929. பப்மெட்:32090616. 
  6. "REPORT FROM THE COMMISSION TO THE COUNCIL AND THE EUROPEAN PARLIAMENT Seventh Report on the Statistics on the Number of Animals used for Experimental and other Scientific Purposes in the Member States of the European Union". EUR-Lex. 12 May 2013. https://eur-lex.europa.eu/legal-content/EN/TXT/?uri=CELEX:52013DC0859. 
  7. Carbone, Larry. (2004). What Animals Want: Expertise and Advocacy in Laboratory Animal Welfare Policy.
  8. "EU statistics show decline in animal research numbers". Speaking of Research. 2013. பார்க்கப்பட்ட நாள் 24 January 2016.
  9. "U.S. Will No Longer Require Animal Testing for New Drugs". January 13, 2022.

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்குப்_பரிசோதனை&oldid=3644911" இலிருந்து மீள்விக்கப்பட்டது