விலங்கு நடத்தை (ஆய்விதழ்)

விலங்கு நடத்தை (Animal Behaviour) என்பது, 1953இல் பிரித்தானிய விலங்கு நடத்தை இதழ் என்ற பெயரில் துவங்கப்பட்டு, 1958இல் விலங்கு நடத்தை என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட, சக மதிப்பாய்வு அடிப்படையிலான அறிவியல் ஆய்விதழ் ஆகும். விலங்கு நடத்தை ஆய்வுக் கழகமானது விலங்கு நடத்தை மன்றத்தோடு சேர்ந்து மாதந்தோறும் எல்செவியர் குழுமத்தினால் இவ்விதழ் வெளியிடப்படுகிறது.

விலங்கு நடத்தை
Animal Behaviour
 
முன்பிருந்த பெயர்(கள்) பிரித்தானிய விலங்கு நடத்தை இதழ்
British Journal of Animal Behaviour
துறை விலங்கினநடத்தையியல்
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: எல். பாரெட், டபிள்யூ. ஏ. சீர்சி
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் எல்செவியர்
வரலாறு 1953
தாக்க காரணி 3.041 (2022)
குறியிடல்
ISSN 0003-3472 (அச்சு)
1095-8282 (இணையம்)
LCCN 56002267
CODEN ANBEA8
OCLC 04699737
இணைப்புகள்

இது எல்லா வகையான விலங்கின நடத்தையியல் நெறிமுறைகளையும் உள்ளடக்கியது, நடத்தை சூழலியல் உட்பட, நடத்தையின் பரிணாம வளர்ச்சி, சமூக உயிரியல், நடத்தை உடலியல், மக்கள்தொகைசார் உயிரியல், வழிநடத்தல் மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றை உள்ளடக்கியது. இவ்விதழின் தாக்க காரணி 3.041 என 2022ஆம் ஆண்டு மேற்கோள் தகவலின் படி அறியப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு