விலாயத் உசைன் கான்

உஸ்தாத் விலாயத் உசேன் கான் (Vilayat Hussain Khan) (1895-1962) ஒரு இந்தியப் பரம்பரியப் பாடகரும் ஆக்ரா கரானாவை (பாடும் பாணி) சேர்ந்த ஆசிரியருமாவார். "பிரண் பியா" என்ற புனைப் பெயரில் பல இராகங்களை இயற்றினார். [1][2][3]

விலாயத் உசைன் கான்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்விலாயத் உசைன் கான்
பிறப்பு1895 (1895)
இறப்பு1962 (அகவை 66–67)
இசை வடிவங்கள்இந்தியப் பாரம்பரிய இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடுதல்

பயிற்சி

தொகு

விலாயத் கான் தனது தந்தை நாதன் கானிடமிருந்து பாரம்பரிய இசையில் தனது ஆரம்ப பயிற்சியைப் பெற்றார். தனது தந்தை இறந்த பிறகு, தனது மாமாக்கள் கல்லன் கான், முகமது பக்ச் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். புகழ்பெற்ற இசைக்கலைஞர் பயாசு கான் இவருக்கு பயிற்சி அளித்தார். [3]

மாணவர்கள்

தொகு

இவரது மாணவர்களில் மோகுபாய் குர்திகர், யச்பால், செகநாத்புவ புரோகித், மேனகா சிரோத்கர் (ஷோபா குருதுவின் தாய்), இரத்னகாந்த் ராம்நத்கர், இராம் மராத்தே, கஜானன்ராவ் ஜோஷி, கிரிஜா கேல்கர் ஆகியோர் அடங்குவர். இவரது மகன் யூனுஸ் உசைன் கான் ஆக்ரா கரானாவில் ஒரு முக்கிய நபராவார்.[4][2]

குறிப்புகள்

தொகு
  1. Kuldeep Kumar (6 September 2012). "Remembering a great master (Vilayat Hussain Khan)". The Hindu (newspaper). பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
  2. 2.0 2.1 Tribute to a Maestro (Vilayat Hussain Khan) பரணிடப்பட்டது 2021-02-06 at the வந்தவழி இயந்திரம் ITC Sangeet Research Academy website, Retrieved 14 August 2019
  3. 3.0 3.1 Profile of Vilayat Hussain Khan on Parrikar.org website பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Retrieved 14 August 2019
  4. "Ustad Yunus Hussain Khan (singer son of Vilayat Hussain Khan)". itcsra.com. Archived from the original on 22 March 2012. பார்க்கப்பட்ட நாள் 14 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விலாயத்_உசைன்_கான்&oldid=3592008" இலிருந்து மீள்விக்கப்பட்டது