உஸ்தாத் பயாசு கான் (Faiyaz Khan) (8 பிப்ரவரி 1886 – 5 நவம்பர் 1950) இவர் ஓர் இந்திய பாரம்பரிய பாடகரும், இந்துஸ்தானி இசையின் ஆக்ரா கரானாவின் (பாடும் பாணி) நிபுணருமாவார். [1] இவர், வடோதராவில் தான் இறக்கும் போது, இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மற்றும் செல்வாக்கு மிக்க பாடகர்களில் ஒருவராக புகழ் பெற்றிருந்தார். [3]

பயாசு கான்
பிறப்பு8 பிப்ரவரி 1886[1]
ஆக்ரா அருகிலுள்ள சிகந்தரா, உத்தரப் பிரதேசம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்[2]
இறப்பு5 நவம்பர் 1950(1950-11-05) (அகவை 69–70)[2]
வடோதரா, குசராத்து, இந்தியா
மற்ற பெயர்கள்அப்தாப்-இ-மௌசிகி" ( இசைச் சூரியன்)
பணிஇந்துஸ்தானி இசையை பாடுதல்
செயற்பாட்டுக்
காலம்
1924 – 1950[2]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

1886 இல் உத்தரபிரதேசத்தில் சிகந்தராவில் சப்தார் உசேன் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்தார். இவரை இவரது தாய்வழி தாத்தா குலாம் அப்பாசு (1825-1934) வளர்த்தார். இவருக்கு 25 வயது வரை இசையை கற்றுக் கொடுத்தார். இவர் உஸ்தாத் மெகபூப் கான், அவரது மாமியார், நேத்தியன் கான் , அவரது மாமா பிதா உசேன் கான் ஆகியோரின் மாணவராவும் இருந்தார்.

வடோதராவின் மன்ன்ன் சர் மூன்றாம் சாயாஜிராவ் கெய்க்வாடின் அரசவைக் கலைஞராக நீண்ட காலம் பணியாற்றினார். அங்கு இவருக்கு "ஞான ரத்னா" (அறிவின் ரத்தினம்) என்ற பட்டம் வழங்கப்பட்டது. மைசூர் அரசன் 1908இல் இவருக்கு "அப்தாப்-இ-மௌசிகி" ( இசையின் சூரியன்) என்ற பட்டத்தை வழங்கினார். இவர், துருபாத் கியால் ஆகியவற்றில் திறமையானவராக இருந்தாலும், தும்ரி, கசல் பாடும் திறனையும் கொண்டிருந்தார். [3]

இறப்பு தொகு

பயாசு கான் 1950 நவம்பர் 5 அன்று இந்தியாவின் குசராத்தின் வடோதரா காலமானார். வடோதராவில் அமைந்துள்ள இவரது கல்லறை காரணமாக ஏப்ரல் 2002 இல் தாக்கப்பட்டது. கட்டமைப்பில் விரிவான சேதம் ஏற்பட்டது. [1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 Rohiniprasad, K. (10 August 2005). "Profile of Ustad Faiyaz Khan, the great classical vocalist". rohiniprasadk.blogspot.co.uk. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
  2. 2.0 2.1 2.2 Profile of Faiyaz Khan on davidphilipson.com website, Retrieved 6 July 2017
  3. 3.0 3.1 Profile of Faiyaz Khan on SwarGanga Music Foundation website, Retrieved 7 July 2017

வெளி இணைப்புகள் தொகு

  • "Kudrat Rangibirangi" by Kumarprasad Mukhopdhyay, 1st edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயாசு_கான்&oldid=3099505" இலிருந்து மீள்விக்கப்பட்டது