வில்கெம் தி கான்

இடச்சு விலங்கியல் நிபுணர்

வில்கெம் தி கான் (Wilhem de Haan)(7 பிப்ரவரி 1801 ஆம்ஸ்டர்டாம் - 15 ஏப்ரல் 1855 லைடன்) என்பவர் இடச்சு விலங்கியல் நிபுணர் ஆவார். இவர் பூச்சிகள் மற்றும் ஓடுடைய கணுக்காலி ஆய்வில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும் நேச்சுரலிசு என தற்பொழுது அறியப்படும் லைடனில் உள்ள ரிஜ்க்சு அருங்காட்சியகத்தில் முதுகெலும்பிலி விலங்குகளின் பிரிவின் முதல் பராமரிப்பாளராக இருந்தார். இவர் 1846-ல் ஓய்வு பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதுகெலும்பு நோயால் பகுதியளவு செயலிழந்தார். 1833-ல் வெளியிடப்பட்ட சைபோல்டின் விலங்கின ஜபோனிகாவின் முதுகெலும்பில்லாத தொகுதியின் பொறுப்பாசிரியர் இவர் ஆவார். மேலும் ஜப்பானிய வனவிலங்குகளை முதல் முறையாக மேற்கத்திய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் பல புதிய உயிரலகிற்குப் பெயரிட்டார். மேலும் பல உயிரலகுகள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன.[1]

இவர் மாண்டிட்கள் மற்றும் பாசுமிட்கள் குறித்து குறிப்பிடத்தக்க படைப்புகளை வெளியிட்டார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. W. Vrolik (1855). "Levensberigt van Wilhem de Haan" (in Dutch). Verslagen en Mededeelingen (Amsterdam: Koninklijke Akademie van Wetenschappen) 3: 399–408. https://books.google.com/books?id=hZQEAAAAQAAJ&pg=PA399. 
  2. de Haan, W. Bijdragen tot de Kennis Orthoptera. in C.J. Temminck, Verhandelingen over de natuurlijke Geschiedenis der Nederlandsche overzeesche Bezittingen. volume 2.(1842)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்கெம்_தி_கான்&oldid=4110781" இலிருந்து மீள்விக்கப்பட்டது