வில்லியம் இராபர்ட் ஓகில்வி-கிராண்ட்

வில்லியம் இராபர்ட் ஓகில்வி-கிராண்ட் (William Robert Ogilvie-Grant)(25 மார்ச் 1863 - 26 சூலை 1924) ஒரு இசுக்காட்லாந்து பறவையியலாளர் ஆவார்.

இளமை மற்றும் கல்வி

தொகு
 
வில்லியம் இராபர்ட் ஓகில்வி-கிராண்டின் இமயமலை மோனாலின் விளக்கப்படம்

கிராண்ட் 25 மார்ச் 1863 அன்று படைத்தலைவர் கெளரவத்தின் இரண்டாவது மகனாகப் பிறந்தார். பெரும்எடின்பரோவில் உள்ள பெட்டசு கல்லூரியில் கல்வி பயின்றார். இங்கு இவர் விலங்கியல் மற்றும் உடற்கூறியல் துறையில் படித்தார்.[1] இவர் கார்கில்ஃபீல்ட் தயாரிப்பு பள்ளியிலும் படித்துள்ளார்.[2]

தொழில்

தொகு

1882-ல் ஓகில்வி-கிராண்ட் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உதவியாளரானார். இவர் ஆல்பர்ட் சிஎல்ஜி குந்தரிடம் மீனியல் கல்வி கற்றார். மேலும் 1885-ல் ரிச்சர்ட் பவுட்லர் சார்ப்[1] இந்தியாவிற்கு வருகை தந்ததன் கீழ் பறவையியல் பிரிவின் தற்காலிகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் 1909 முதல் 1918 வரை பறவைகள் காப்பாளராக பணியாற்றினார்.[3]

இவர் 1904 முதல் 1914 வரை பதவி வகித்த பிரித்தானிய பறவையியலாளர்கள் குழு ஆய்விதழின் ஆசிரியராகவும் பவுட்லர் சார்ப்பிற்குப் பிறகு பதவியேற்றார்.

ஓகில்வி-கிராண்ட் பல சேகரிப்பு பயணங்களை மேற்கொண்டார். இதில் குறிப்பிடத்தகவைகளாக சுகுத்திரா, மதீரா மற்றும் கேனரி தீவுகளுக்கான பயணம் அமைந்துள்ளது.

விவரிக்கப்பட்ட உயிரலகு

தொகு
  • வில்லியம் ராபர்ட் ஓகில்வி-கிராண்ட் என்பவரால் பெயரிடப்பட்ட பகுப்பு:உயிரலகுகளைப் பார்க்கவும்

நினைவாகப் பெயரிடப்பட்ட உயிரலகு

தொகு
  • ஓகில்வி-கிரான்ட் என்பது சோகோட்ராவில் காணப்படும் அகணிய உயிரியான கெமிடாக்டைலசு கிராண்டி என்ற மரப்பல்லி சிற்றினத்தின் அறிவியல் பெயரில் நினைவுகூரப்படுகிறது.[4]
  • போன்சோ இரட்டை-வால் கெளதாரி பறவை டெர்னிஸ்டிஸ் பைகல்காரடசு ஓகில்விகிராண்டி (பேனர்மேன் 1922) என்பது இவரது நினைவாகப் பெயரிடப்பட்ட பறவையாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஒகில்வி-கிராண்ட் அட்மிரல் மார்க் ராபர்ட் பெச்செலின் மகள் மவுட் லூயிசாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் இருந்தனர். இவரது மகன் மார்க் ஓகில்வி-கிராண்ட் ஒரு இராஜதந்திரி மற்றும் தாவரவியலாளர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "William Robert Ogilvie Grant" (PDF). britishbirds.co.uk. பார்க்கப்பட்ட நாள் 17 February 2022.
  2. The Auk (in ஆங்கிலம்). American Ornithologists' Union. 1924. p. 644.
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles (in ஆங்கிலம்). JHU Press. p. 106. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5.
  4. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. ("Grant, W.R.O.", p. 106).

ஆதாரம்

தொகு
  • Mullens and Swann - A Bibliography of British Ornithology. .