வில்லியம் கம்குவாம்பா
வில்லியம் கம்குவாம்பா (William Kamkwamba) என்பவர் மலாவி நாட்டிலுள்ள காசுன்கு ஊரில் வறுமையான குடும்பத்தில் பிறந்த கண்டுபிடிப்பாளர்; பொறியாளர். அவரது குடும்பத்தினர், முக்கிய வருமானமாக, வேளாண்மையையே நம்பியிருந்தனர். சிறுவயது முதல் தனது வாழிடத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டும், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியும், வில்லியம் தனது நண்பர்களுடன் விளையாடி மகிழ்வார்.[1] பள்ளிக் கட்டணம் கட்டா இயலாத சூழ்நிலையில் பள்ளிப்படிப்பை முதலில் கைவிடுகிறார். இருப்பினும், பல போராட்டங்களுக்குப் பிறகு பள்ளி நூலகத்தில் தொடர்ந்து பல்வேறு நூல்களைப் படித்தார். அதனால் அவர் மின்னணுவியல் துறையில் ஆர்வம் கொண்டு, கிராமத்து வானொலிகளைப் பழுது நீக்கித் தரும் கடை நடத்தி வந்தார். அதில் போதிய வருமானம் அவருக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து நூல் படிக்கும் பழக்கத்தால், ஆற்றலைப் பயன்படுத்துதல் (Using Energy)[2] என்ற நூலினால் மன உந்துதல்களைப் பெற்றார்.
வில்லியம் கம்குவாம்பா | |
---|---|
கம்குவாம்பா, TED, 2007 | |
பிறப்பு | 5 ஆகத்து 1987 [காசுன்கு, மலாவி |
தேசியம் | மலாவி குடிமகன் |
கல்வி | இளங்கலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | டார்ட்மத் கல்லூரி |
பணி | கண்டுபிடிப்பு |
அறியப்படுவது | குப்பைப்பொருட்களில் இருந்து காற்றுச்சுழலி அமைத்த திறனாளி. |
கட்டியமைத்தல்
தொகு2001 ஆம் ஆண்டில், கசுங்குவிலிருந்து கிழக்கே 23 கிலோமீட்டர்கள் (14 mi) தொலைவில் உள்ள தனது ஊரான விம்பேவில், அவரது குடும்பத்தினர் வசித்தனர். அவ்வீட்டின் பல மின்கருவிகளுக்கு, மின்சாரம் வழங்குவதற்காக, நீலப் பசை மரங்களையும், மிதிவண்டி பாகங்களையும். உள்ளூர் குப்பைக்கூள மேட்டில் இருந்து சில பொருட்களையும் பயன்படுத்தி, காற்றுச் சுழலியை உருவாக்கினார். அவர் தனது சிற்றூரில், சூரிய சக்தியில் இயங்கும், முதல் குடிநீர் விசையியக்கக் குழாயைக்[3] கட்டியமைத்ததால், அவர் நாட்டினரால் பாரட்டப் பெற்றார். அப்போதிருந்து, மேலும் இரண்டு காற்றுச் சுழலிகளை, 12 மீட்டர்கள் (39 அடி) உயரத்தில் கட்டியமைத்தார். அந்த இரண்டில் ஒன்றினை, அவர் நாட்டின் தலைநகரான இலிலொங்வேயில் கட்டியமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்த மதிப்பினைப் பெற்றுத் தந்தது. இவ்வாறாக தங்கள் வாழ்விடத்தினைச் சுற்றியுள்ள குப்பைக்கூளங்களில் இருந்து, காற்றுச் சுழலி அமைத்து, நிலத்தடி நீரை அனைவரும் பயன்படுத்த வழிவகுத்தார்.
கல்வி
தொகு2007 ஆம் ஆண்டில், இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தீவிரமான இரண்டு ஆண்டு கல்வித் திட்டங்களினால் பயன்பெறுகிறார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Kamkwamba, William; Mealer, Bryan (2009). காற்றைப் பயன்படுத்திய சிறுவன்: மின்சாரம் மற்றும் நம்பிக்கையின் நீரோட்டங்களை உருவாக்குதல். NY York, NY: HarperCollins-Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-06-173033-7.
- ↑ Atwater, Mary (1995). Using energy. New York: Macmillan/McGraw-Hill School Pub. Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-02-276142-4. இணையக் கணினி நூலக மைய எண் 34171724.
- ↑ "TED Speaker: William Kamkwamba — Inventor". TED. பார்க்கப்பட்ட நாள் 26 பெப்பிரவரி 2024.
- ↑ "William Kamkwamba, ALA Student, adds "Bestselling Author" to his CV". African Leadership Academy (in அமெரிக்க ஆங்கிலம்). 2009-10-20. பார்க்கப்பட்ட நாள் 2024-01-19.