விளம்பி ஆண்டு
தமிழ் ஆண்டுகள் 60வதில் 32 வது ஆண்டு
விளம்பி ஆண்டு என்பது தமிழ்ப் புத்தாண்டில் பிரபவ ஆண்டு துவங்கி அறுபது ஆண்டுகள் என ஆண்டு வட்ட முறையில் வரக்கூடிய ஆண்டுகளில் முப்பத்திரண்டாம் ஆண்டாகும்.[1] இந்த ஆண்டை செந்தமிழில் அட்டி என்றும் குறிப்பர்
விளம்பி ஆண்டு வெண்பா
தொகுவிளம்பி ஆண்டு எப்படிப்பட்டது என்பது குறித்து இடைக்காட்டுச் சித்தர் இயற்றியதாக கூறப்படும் வெண்பா
விளம்பி வருடம் விளையு கொஞ்சமாரி
அளந்து பொழியும் அரசர் கலிங்கமுடன்
நோவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை
ஆவா புகலவரிதாம்
இந்தப் பாடலின்படி இந்த ஆண்டில் குறைவாக மழை பொழியும். இதனால் உணவு விளைச்சல் குறையும். ஆட்சியாளர்கள் கொடுக்கோல் ஆட்சி செய்வார்கள். மக்கள் சொல்ல இநலாதவாறும், பார்க்க இயலாதவாறும் கொடுமைகளை அனுபவிப்பர். கொடிய நோயினால் மெலிந்து மடிவர் என்கிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "விளம்பி". பொருள். விக்சனரி. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விளம்பி தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்". கட்டுரை. tamilhoroscope.in. 2020 ஏப்ரல் 13. Archived from the original on 2020-05-17. பார்க்கப்பட்ட நாள் 16 ஏப்ரல் 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)