விழிஞ்ஞம் குகைக் கோயில்
கேரளத்தின், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள குகைக் கோயில்
விழிஞ்ஞம் குகைக் கோயில் (Vizhinjam Cave Temple) என்பது இந்தியாவின் தென் கேரளத்தில், திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள விழிஞ்ஞத்தில் கிபி. 8 ஆம் நூற்றாண்டு கால இந்து கோவில் ஆகும். [1]
விழிஞ்ஞம் குகைக் கோயில் | |
---|---|
விழிஞ்ஞம் குகைக் கோயில் | |
அமைவிடம் | கேரளம், திருவனந்தபுரம் |
குகையில் ஒரே கல்லலில் செதுக்கபட்ட வீணா தட்சிணாமூர்த்தியின் ஒரு சிற்பத்தை உள்ளடக்கிய சன்னதி உள்ளது. குகையின் வெளிப்புறச் சுவரில் இடதுபுறத்தில் சிவனின் திரிபுராந்தகர் சிற்பமும், வலதுபுறத்தில் பார்வதியுடன் நடராசர் சிற்பமும் உள்ளது. மேலும் முடிக்கப்படாத பல்லவ துவாரபாலகர்கள் சிற்பமும் உள்ளன.[1]
இந்தக் கோயிலானது திருவனந்தபுரம் நகர மையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் கேரளத்தின் தெற்குப் பகுதிகளை ஆண்ட ஆய் மன்னர்களின் தலைநகராக விழிஞ்ஞம் இருந்தது.
பட தொகுப்பு
தொகு-
"விணாதர தட்சிணாமூர்த்தி"
-
பார்வதியுடன் நடராசர்
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Vizhinjam Cave Temple தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விழிஞ்ஞம் குகைக் கோயில், திருவனந்தபுரம்