வீணா தட்சிணாமூர்த்தி
சிவபெருமான் நாரத முனிவருக்கும், சுக்ரமுனிவர்களுக்கும் இசையைப் பற்றி கற்பித்த உருவம் வீணா தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இத்தோற்றத்தில் வீணையைக் கையில் ஏந்தியவராகத் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். சாம வேதத்தினை வீணையில் இசைத்திட விரும்பிய நாரத முனிவரும், சுக்ர முனிவர்களும் சிவபெருமானை வேண்டிக் கொண்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சிவபெருமான் இசை ஞானத்தினையும், சாம வேதத்தின் இசையையும் அவர்களுக்குக் கற்பித்தார். வீணையை உருவாக்குவது பற்றியும், அதனை முறையாக இசைப்பது பற்றியும் வீணா தட்சிணா மூர்த்தியாகிய சிவபெருமான் எடுத்துரைத்தார். வீணையை இசைத்தும், பாடியும் கற்பித்த வீணா தட்சிணாமூர்த்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடியில் காட்சியளிக்கிறார். வெளி இணைப்புகள்தொகு
|