விவசாய சூழ்நிலையியல்

விவசாய சூழ்நிலையியல் (agroecology) என்பது விவசாய உற்பத்தி முறைமை சார்ந்த சூழ்நிலையியல் நிகழ்முறை தொடர்பான ஒரு துறையாகும். விவசாய சூழ்நிலையியல் முறைமைகளில், சூழ்நிலையியல் கொள்கைகளைக் கவனத்தில் கொள்வது, வேறு முறைகளில் கருத்தில் எடுக்கப்படாத புதிய மேலாண்மை அணுகுமுறைகளைக் கைக்கொள்வதற்கு வழியேற்படுத்துகிறது. துல்லியமற்ற முறையில் பயன்படுத்தப்படும் இச்சொல், ஒரு அறிவியலையோ, ஒரு இயக்கத்தையோ அல்லது ஒரு செயல் முறையையோ குறிக்கக்கூடும்.

சூழ்நிலையியல் உத்தி தொகு

விவசாயச்சூழ்நிலையியலாளர்கள் வேளாண்மையில் தொழில்நுட்ப உள்ளீடுகளை ஒருமனதாக எதிர்ப்பதில்லை. ஆனால், தொழில்நுட்பங்களை எவ்வாறு, எப்போது இயற்கை, சமூகம், மனிதர் சார்ந்த வளங்களுடன் சேர்த்தோ பயன்படுத்தலாம் என்பது குறித்து மதிப்பீடு செய்கின்றனர். விவசாயச் சூழ்நிலையியல் சூழ்நிலை சார்ந்த அல்லது இடத்துக்கு உகந்த முறையில் விவசாயச் சூழ்நிலையியல் முறைமைகளை ஆய்வு செய்வதை வேண்டிநிற்கிறது. இதனால், விவசாயச் சூழ்நிலை முறைமையின் வெற்றிக்கும், உயரளவான நலத்துக்கும் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு சமன்பாடோ அல்லது வழிமுறையோ இல்லை என்பதை அது ஏற்றுக்கொள்கிறது. ஆகவே, விவசாயச் சூழ்நிலையியல், பூச்சிகொல்லிகளுக்குப் பதிலாக இயற்கை எதிரிகளைப் பயன்படுத்துதல், அல்லது ஒருபயிர்ச் சாகுபடிக்குப் பதிலாக பல்பயிர்ச் சாகுபடியைக் கைக்கொள்ளுதல் போன்ற குறிப்பிட்ட மேலாண்மை நடைமுறைகளால் வரையறுக்கப்படுவதில்லை.

பதிலாக, விவசாயச் சூழ்நிலை முறைமைகளின் நான்கு இயல்புகளான உற்பத்தித்திறன், உறுதிப்பாடு, பேண்தகைமை, சமநிலை (equitability) ஆகியவை தொடர்பான பிரச்சினைகளை விவசாயச் சூழ்நிலையியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இவ்வியல்புகளில் ஒன்றையோ சிலவற்றையோ மட்டும் கருத்தில் எடுக்கக்கூடிய துறைகளைப் போலன்றி, விவசாயச் சூழ்நிலையியல், நான்கு இயல்புகளுமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்றும் விவசாயச் சூழ்நிலை முறைமையின் வெற்றிக்கு ஒருங்கிணைந்த பங்களிப்புச் செய்கின்றன என்றும் கொள்கிறது. மேற்காட்டிய இயல்புகள் பல்வேறுபட்ட இடஞ்சார் அளவுத்திட்டங்களில் காணப்படுவதால், விவசாயச் சூழ்நிலையாளர்கள், மரபணு - உயிரினம் - இனத்தொகை - சமுதாயம் - சூழ்நிலைமண்டலம் - நிலத்தோற்றம் - உயிரினவாழிடம், வயல் - பண்ணை - சமூகம் - பிரதேசம் - மாநிலம் - நாடு - கண்டம் - உலகம் போன்ற ஏதாவது ஒரு அளவுத்திட்டத்தில் ஆய்வுகளை நிறுத்திக்கொள்வதில்லை.

ஆற்றல் தொகு

  1. இயற்கை ஆற்றலாக சூரியனும் செயற்கை ஆற்றல்களாக, கால் நடைகள், மனிதர்கள் மற்றும் சேமித்த ஆற்றலாக பெட்ரோல் டீசல் ஆகியவை உள்ளன[1]

உணவுச்சங்கிலி தொகு

எளிதான நேரியல் அமைப்பு கொண்டது

பல்லுயிரின் வேறுபாடு தொகு

  1. பல் உயிரினப்பெருக்கம் என்பது மிகவும் குறைந்து, மனிதனின் சுயநலதிற்காக தேவையான உயிரிணங்கள் மட்டும் காணப்படுகிறது.
  2. இனவேறுபாடு மிகவும் குறைந்து காணப்படுகிறது[2]
  3. மரபியல் வேற்றுமை மிகவும் குறைந்து காணப்படுகிறது

நிகர உற்பத்தி திறன் தொகு

நிகர உற்பத்தி திறன் மிகவும் அதிகமாக உள்ளது

மனிதனால் கட்டுப்படுத்தப்படுதல் தொகு

முழுக் கட்டுப்பாடு தேவை

கனிமச்சுழற்சி தொகு

திறந்த சுழற்சியாகும்

வாழ்வின வேறுபாடு தொகு

எளிய வழாகம்

முதிர்வு தொகு

முதிராத நிலை (immature), ஆரம்ப தொடர்வரிசையிலானது

நிலைபுத்தன்மை தொகு

நிலைப்புத்தன்மை (resilence) குறைவு

வளர்ச்சி நிலை தொகு

ஒத்திசைக்கப்பட்ட பருவ காலம்

பரிணாபங்கள் தொகு

  1. இனப்பெருக்க திட்டகள் மூலமாகவும் மரபணுத்திட்டங்கள் போன்றவற்றின் வளர்ச்சியினால் பரிணாமகள் பெருமளவில் காணப்படுகிறது

பூச்சிமருந்துகளின் உபயோகம் தொகு

உணவுச் சங்கிலியில் உருப்பெருக்கம் தொகு

  1. பலவாறான பூச்சி மருந்துகள் பயன்படுதப்படுகின்றன. பிஎச்சி, டீடீடீ போன்ற கரிம பூச்சி மருந்துகள் பயன்படுததப்பட்டு, உணவுச் சங்கிலியில் பெருமளவு தங்கி பல உபதைகளை எற்படுதுகின்றன.

இரண்டாம் நிலை பூச்சிப்பெருக்கம் தொகு

  1. சில பூச்சிக்கொல்லிகளினால் இரண்டாம் நிலை பூச்சிப்பெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பல சமயக்களில் பூச்சி கள் இரசாயணக்கொல்லிகளுக்கு எதிராக எதிர்ப்புதிறன் பெற்றுவிடுகிறன.

சக்திமிக்க அழிக்கமுடியாத களை உருவாக்கம் தொகு

மரபணுப்பெருக்க முறையில் உருவாக்கப்பட்ட பயிர்களில் இருந்து மரபணுக்கள் மகரந்தங்கள் வாயிலாக களைகள் மற்றும் பாரம்பரிய இரகத்தில் புகுந்து அந்த இரகத்தை அழிப்பதுடன், எந்த வழியிலும் அழிக்கமுடியாத களைகளையும் (super weed) உருவாக்கியுள்ளது

விவசாய வகை தொகு

  1. மானாவாரி விவசாயம்
  2. பாசணமுறை விவசாயம்

உசாத்துணை தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-13. பார்க்கப்பட்ட நாள் 2015-01-23.
  2. http://agroeco.org/wp-content/uploads/2010/12/Bioscience-devSustAg.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவசாய_சூழ்நிலையியல்&oldid=3571833" இலிருந்து மீள்விக்கப்பட்டது