விவாக பஞ்சமி

மிதிலையின் புனித நாள்

விவாக பஞ்சமி (Vivaha Panchami) என்பது இராமன், சீதை ஆகிய இருவரின் திருமணத்தை கொண்டாடும் ஒரு இந்து பண்டிகை ஆகும். இது மைதிலி நாட்காட்டியின்படி அக்ரகாயன மாதத்தில் (நவம்பர்-திசம்பர்) சுக்ல பட்சத்தின் ஐந்தாவது நாளிலும், இந்து நாட்காட்டியில் மார்கழி மாதத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்தியாவிலும், நேபாளத்தின் மிதிலைப் பிரதேசத்திலும் உள்ள இராமனுடன் தொடர்புடைய கோவில்களிலும், புனித இடங்களிலும் "விவாக உத்சவம்" எனக் கொண்டாடப்படுகிறது.

விவாக பஞ்சமி
கடைபிடிப்போர்இந்துக்கள்
வகைஇந்து
நிகழ்வுவருடாந்திரம்

அனுசரிப்புகள்

தொகு

நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அங்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்தியாவிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். ஏனெனில் சீதை இராமனை (அயோத்தியின் இளவரசர்) திருமணம் செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.[1]

பண்டிகை தேதிகள்

தொகு
  1. 2010: டிசம்பர் 10
  2. 2014: நவம்பர் 27
  3. 2015: டிசம்பர் 16(புதன்)[2]
  4. 2018: டிசம்பர் 13[3]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சான்றுகள்

தொகு
  1. Naresh Chandra Sangal; Prakash Sangal (1998). Glimpses of Nepal. APH Publishing. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7024-962-7.
  2. "2015 Vivah Panchami". DrikPanchang. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  3. "Vivaha panchami, vivaha panchami legend - Festivals of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=விவாக_பஞ்சமி&oldid=3599414" இலிருந்து மீள்விக்கப்பட்டது