விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி

விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி என்பது காசுமீரின் சிறிநகரில் உள்ள ரெய்னாவாரியில் தால் ஏரியின் உப்பங்கழியில் 1980 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு கல்வியியல் கல்லூரியாகும். 2009 ஆம் ஆண்டு வரை பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியாக இருந்த இது, ஆசிரியர் கல்வியின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய ஆண்களையும் சேர்த்துக் கொள்ள காசுமீர் பல்கலைக்கழகத்தால் அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது இருபாலரும் பயிலும் கல்வி நிறுவனமாக இயங்கிவருகிறது.[1]

விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி
வகைதனியார் கல்லூரி
உருவாக்கம்1980; 44 ஆண்டுகளுக்கு முன்னர் (1980)
சார்புகாசுமீர் பல்கலைக்கழகம்
தரநிர்ணயம்தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தலைவர்முனைவர் எஸ்.கே. கவுல்
முதல்வர்பேராசிரியர் பாரதி பட்
அமைவிடம்
அகல்பூர் மோர்
, ,
180018
,
32°44′52″N 74°48′01″E / 32.74774°N 74.80034°E / 32.74774; 74.80034
வளாகம்நகர்ப்புறம்
மொழிஉருது, இந்தி, ஆங்கிலம், காசுமீரி
இணையதளம்கல்லூரி இணையதளம்
விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி is located in ஜம்மு காஷ்மீர்
விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி
Location in ஜம்மு காஷ்மீர்
விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி is located in இந்தியா
விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி
விஸ்வ பாரதி கல்வியியல் கல்லூரி (இந்தியா)


காசுமீர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள[2] இந்த கல்லூரி அப்பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக 1990 ஆம் ஆண்டில் காஷ்மீரில் இருந்து மாற்றப்பட்டு, தற்போது ஜம்முவின் அகல்பூர் மோர் என்ற இடத்தில் இயங்கிவருகிறது.

அங்கீகாரம்

தொகு

சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஒரு தன்னாட்சி இயக்குநர் குழுவால் காசுமீரப்பகுதியில் நிர்வகிக்கப்படும் தனியார்க் கல்லூரியான இது, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் மார்ச் 2007 ஆம் ஆண்டில் பி தரமளிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கற்றல் வசதிகள்

தொகு

ஆசிரியர் பயிற்றுநர்களின் செயல்முறைத் திறனை மேம்படுத்தவும், பங்கேற்புக் கற்றலை ஊக்குவிக்கவும், இக்கல்லூரி அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களை இயக்கிவருகிறது

  • கணித ஆய்வகம் - கணிதக் கருத்துகளைக் கற்கவும், ஆராயவும், பல்வேறு பொருட்களைப் பயன்படுத்தி அதன் பல்வேறு செயல்பாடுகள் மூலம் கணித உண்மைகள் மற்றும் தேற்றங்களை சரிபார்க்கவும் பயன்படுத்தப்படுகிறது
  • தொழில்நுட்ப ஆய்வகம் - நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி பயிற்சியாளர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்கான வசதிகள் கொண்ட ஆய்வகம்
  • மொழி ஆய்வகம் - மொழி தடைகளை சமாளிக்க மாணவர்களை தயார்படுத்துவதும், மொழி கற்றலில் நேர்மறையான அணுகுமுறையை வளர்க்கவும் ஆங்கில மொழிப்புலமையை அதிகரிக்க இது உதவுகிறது
  • சமூக அறிவியல் ஆய்வகம் - ஆசிரியர் மாணவர் இடையே இணக்கமான சூழ்நிலையை உருவாக்கவும் பராமரிக்கவும் பயன்படுகிறது.
  • உளவியல் ஆய்வகம் - தேர்வுகளின் நோக்கங்களையும், நடத்தும் முறைகளையும் மாணவர்களுக்கு அறிவிக்கும் வகையில் நவீன கருவிகள் மற்றும் உளவியல் பரிசோதனைகள் கொண்ட ஆய்வகம்
  • கணினி ஆய்வகம் - இணையதள வசதியுடன் கூடிய கணினிகள் மற்றும் மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் வருடிகள் பொருத்தப்பட்டுள்ள ஆய்வகம்
  • அறிவியல் ஆய்வகம் - நுண்ணோக்கிகள், தராசுகள், விளக்கப்படங்கள் மற்றும் மாதிரிகள் உள்ளதும் உயிரி அறிவியல் மற்றும் இயற்பியல் செய்முறைகளை செயல்முறை விளக்கத்துடன் அளிக்க வசதியுள்ள ஆய்வகம்
  • நூலகம் - 8000க்கும் மேற்பட்ட பாடநூல்கள், 1000 மேற்கோள் புத்தகங்கள் மற்றும் 32 சந்தா செலுத்திய சஞ்சிகைகள் உட்பட சுமார் 10,000 புத்தகங்களைக் கொண்டுள்ள ஒரு நூலகமும் உள்ளது
  1. "கல்லூரியைப் பற்றி".
  2. "காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள்".