வி. அப்துரகிமான்

கேரள அரசியல்வாதி

வி. அப்துரகிமான் (V. Abdurahiman) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.1962 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதியன்று மலப்புறம் மாவட்டம் திரூரில் இவர் பிறந்தார். தற்போது மீன்வளத்துறை, துறைமுகப் பொறியியல், மீன்வளப் பல்கலைக்கழகம், விளையாட்டு, வக்ஃப் மற்றும் அச்சு யாத்திரை, தபால்கள் மற்றும் தந்திகள், இரயில்வே ஆகிய துறைகளில் கேரள அரசு அமைச்சராகப் பணியாற்றி வருகிறார்.[2][3]

வி. அப்துரகிமான்
V. Abdurahiman
கேரள மந்திரி
மீன்வளத்துறை, துறைமுகப் பொறியியல், மீன்வளப் பல்கலைக்கழகம், விளையாட்டு, வக்ஃப் மற்றும் அச்சு யாத்திரை, தபால்கள் மற்றும் தந்திகள், இரயில்வே ஆகிய துறைகளில் கேரள அரசு அமைச்ச
கேரள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
20 மே 2021
முதலமைச்சர்பிணறாயி விஜயன்
முன்னையவர்ஈ. பி. ஜெயராஜன்
கே. டி. ஜலீல்
சாஜி செரியன்
கேரள சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2016
முன்னையவர்அப்துரகிமான் இரண்டாதானி
தொகுதிதானூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 சூன் 1962, திரூர், மலப்புறம் மாவட்டம், கேரளா, இந்தியா[1]
அரசியல் கட்சிதேசிய மதச்சார்பற்ற மாநாட்டுக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
இடதுசாரி சனநாக முன்னணி
துணைவர்சாயிதா ரகுமான்[1]
வாழிடம்(s)திரூர், கேரளா, இந்தியா[1]

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அப்துரகிமான் தொழில் ரீதியாக ஒரு தொழிலதிபர். சாயிதாவை திருமணம் செய்து கொண்டார். இவரது பிறப்பிடம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூரின் பூக்கயில் கிராமமாகும்.[1]

அரசியல் தொகு

அப்துரகிமான் காங்கிரசு தலைவராக இருந்தார். திரூர் நகராட்சியில் 15 ஆண்டுகள் நகராட்சி உருப்பினராக பணியாற்றினார். கேரள பிரதேச காங்கிரசு கமிட்டி செயற்குழு உறுப்பினர், திரூர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசை விட்டு வெளியேறினார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இடதுசாரி சனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளராக பொன்னானி தொகுதியில் போட்டியிட்டு, நாடளுமன்ற உறுப்பினரான இ.டி முகமது பசீரால் தோற்கடிக்கப்பட்டார்.[4] 2016 ஆம் ஆண்டு கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் தனூர் தொகுதியில் இதே கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5][6] 2021 ஆம் ஆண்டிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார்.

சர்ச்சை தொகு

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கேரளாவில் உள்ள பழங்குடி ஆர்வலர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டார். திரூரின் சட்டமன்ற உறுப்பினர் சி மம்முட்டிக்கு எதிராக செய்தியாளர் சந்திப்பின் போது அப்துரகிமான் பழங்குடியினருக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்.[7][8][9][10]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "V.ABDURAHIMAN". பார்க்கப்பட்ட நாள் 12 July 2018.
  2. "Kerala Assembly Election 2016 Results". Kerala Legislature. பார்க்கப்பட்ட நாள் 8 June 2016.
  3. "KERALA GAZETTE". Archived from the original on 21 மே 2021. பார்க்கப்பட்ட நாள் 26 May 2021.
  4. DNA Web Team (22 April 2019). "Ponnani Lok Sabha constituency: Candidates for 2019 LS poll, past results, all updates". DNA India. https://www.dnaindia.com/india/report-ponnani-lok-sabha-constituency-candidates-for-2019-ls-poll-past-results-all-updates-2742099. 
  5. "Kerala Niyamasabha Election Results 2016, Election commission of India". eci.gov.in.
  6. Staff Reporter (20 May 2016). "LDF bags 4 seats, UDF retains 12 in Malappuram". The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/ldf-bags-4-seats-udf-retains-12-in-malappuram/article8623354.ece. 
  7. Naha, Abdul Latheef (10 November 2020). "A long walk against an ‘anti-tribal’ remark" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/a-long-walk-against-an-anti-tribal-remark/article33061683.ece. 
  8. "Tribal activist walks 40 km barefoot in protest over racist remarks made by MLA". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 10 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  9. "Kerala activists demand apology from MLA for offensive remarks against Adivasis". The News Minute (in ஆங்கிலம்). 8 November 2020. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
  10. "'നിങ്ങള്‍ ആദിവാസികളെ പഠപ്പിച്ചാല്‍ മതി'; ആക്ഷേപിച്ച് ഇടത് എംഎല്‍എ; പ്രതിഷേധം | Thanoor MLA – YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 10 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._அப்துரகிமான்&oldid=3591860" இலிருந்து மீள்விக்கப்பட்டது