வி. என். சிதம்பரம்

தமிழ்த் திரைப்பட நடிகர்

வி. என். சிதம்பரம் என்பவர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக இருந்தவர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை அடுத்த ராங்கியம் எனும் கிராமத்தைச் சேர்ந்த இவர் மதுரையில் வசித்து வந்தார். சென்னையிலுள்ள கமலா திரையரங்கத்தின் உரிமையாளரான இவர் சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சில தமிழ் நூல்களையும் எழுதியிருக்கிறார். நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு கமலா என்கிற மனைவியும், வள்ளியப்பன், நாகப்பன், கணேசு என்கிற மூன்று மகன்களும் உள்ளனர்.

நடிப்பு தொகு

இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். “தூங்கா நகரம்” திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.

எழுதியுள்ள நூல்கள் தொகு

  1. எனது வெளிநாட்டு அனுபவங்கள் - வானதி பதிப்பகம், சென்னை வெளியீடு (சூன், 2004)
  2. எனது ஆலய அனுபவங்கள் - வானதி பதிப்பகம், சென்னை வெளியீடு (சூலை, 2004)

(முழுமையடையவில்லை- தகவல் தெரிந்தவர்கள் சேர்க்கலாம்.)

கண்ணதாசன் நண்பர் தொகு

கவிஞர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர் சிதம்பரம் அவர்கள், கவிஞர் கண்ணதாசன் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்த போது நேரில் சந்தித்து பேசிய ஒரே நண்பர் இவர்தான்.

மறைவு தொகு

மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் 2012, நவம்பர் 24 அன்று மரணமடைந்தார்.[1], [2], [3] இவருடைய உடல் அவரது சொந்த ஊரான ராங்கியத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. மீனாட்சி அம்மன் கோயில் முன்னாள் தக்கார் சிதம்பரம் மரணம்
  2. "வி. என். சிதம்பரம் காலமானார்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
  3. "சென்னை கமலா தியேட்டர் உரிமையாளர் வி. என். சிதம்பரம் மரணம்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._என்._சிதம்பரம்&oldid=3719731" இலிருந்து மீள்விக்கப்பட்டது