வி. எம். முனுசாமி

வி.எம்.முனிசாமி என்ற வி.முனுசாமி (அக்டோபர் 2, 1913 - பிப்ரவரி 19, 2008) வேலூர் மாவட்ட தியாகியும், இந்திய காங்கிரஸ் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். [1][2][3][4][5]

வி.எம்.முனிசாமி
பிறப்பு(1913-10-02)2 அக்டோபர் 1913
வேலூர், சைதாப்பேட்டை
இறப்பு19 பெப்ரவரி 2008(2008-02-19) (அகவை 94)
வேலூர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்வேலூர் சிம்மக்குரலோன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்முருகேசன்
முத்தம்மாள்
பிள்ளைகள்சத்தியவதி
பாலசுப்ரமணிணம்மாள்
பாண்டியன்

இளமைப்பருவம்

தொகு

தியாகி வி.எம்.முனுசாமி அவர்கள் ஆங்கிலேயர்களிடம் சிப்பாயாகப் பணியாற்றிய முருகேசன்,முத்தம்மாள் ஆகியோருக்கு மூத்த மகனாக 1914 அன்று வேலூர் சைதாப்பேட்டையில் வண்ணார் சமூகத்தில் பிறந்தார்.சிறுவயதில் சிலம்பம்,குத்துச் சண்டை போன்ற கலைகளை முறையாகப் பயின்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகள் பெற்றுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில்

தொகு
 
பாரத பிரதமர் இந்திரா காந்தி மற்றும் எத்திராஜலு MLC உடன் வி.எம்.முனுசாமி
 
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி உடன் வி.எம்.முனுசாமி

இவர் சுதந்திர தாகத்தால் பகத்சிங் ராஜகுரு,சுகதேவ் வாஞ்சிநாதன் போன்றோரின் முரட்டுத்தனமான வழிகளில் ஆங்கிலேயருக்கு எதிராக சுமார் ஐம்பது சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் குழுவாக போராட்டங்களை நடத்தினார் ஒருமுறை ஆங்கில அரசின் கொடுமைகளை மக்களுக்கு உணர்த்த சைதாப்பேட்டையில் பிரேமாவதி என்ற நாடகத்தை நடத்த, இதைநீதிபதி இவர்களைப் பார்த்து 15, 16 வயது சிறுவர்களாக இருக்கும் நீங்கள் நாடகம் நடத்தினீர்களா? அது தேசத்துரோகம் எனத் தெரியவில்லையா என்றாராம். அதற்கு நம் தியாகி “இது உங்களுக்கு தேசத்துரோகமாகத் தெரியலாம். ஆனால் எங்களுக்கு இது ஒரு புனிதப்போர், எங்கள் நாடு விடுதலை அடைய நாங்கள் நடத்தும் புனிதப்போர் ஆகும்” என்றாராம்.நீதிபதி நீங்கள் சிறுவர்களாக இருப்பதால் இனிமேல் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டோம் என்று மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தால் உங்களை மன்னித்து விடுதலை செய்கின்றேன் என்றாராம். அதற்கு நம் தியாகி அவர்கள் மன்னிப்புக் கடிதம் தரமாட்டோம்,தாங்கள் அளிக்கும் தண்டனையை ஏற்க தயார் என்றாராம் உடனே நீதிபதி மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்தார். வேலூர் சப் ஜெயிலில் இவர்கள் அடைந்த கொடுமைகளை எழுத இயலாத அளவிற்கு அமைந்தது எனலாம் இந்த மூன்று ஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்ட இவரைத் தவிர அனைவருமே மரணமடைந்தனர் என்பதிலிருந்தே எத்தகைய சிறைக் கொடுமைகளை இவர்கள் அனுபவித்தனர் என்பதை அறியலாம் இத்தகைய சம்பவங்களால் ஆங்கில அரசிடம் சிப்பாயாகப் பணிபுரிந்த இவருடைய தந்தையாருக்கு இவர்மீது மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டு இவரை ஒதுக்கினார். கணவர் சொல்லை மீறாத இவருடைய தாயாரும் இவரை வெறுத்தார். அக்காலத்திலேயே ஒரு சிலர் இவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுக்க ஆங்கிலேயரால் பிடிக்கப்பட்டு, ஆங்கிலேயரால் அடித்தும் சுட்டும் தங்கள் இன்னுயிரை சுதந்திர தேவிக்கு வெற்றி மாலையாக அளித்தனர்.ஐம்பது போராட்ட வீரர்களாக இருந்த குழு ஆங்கிலேயரால் கொல்லப்பட்டு நம் தியாகியுடன் ஐந்து போராட்ட வீரர்களாகச் சுருங்கியது இக்கால கட்டங்களில் இவர் பட்ட துயரங்கள் சொல்லி மாளாத வகையில் இருந்தன.பல உண்மையான நண்பர்களைப் பறிகொடுத்த நம் தியாகி இனி முரட்டுத்தனமான போரினால் சுதந்திர தேவியை அடைய முடியாது என்ற முடிவெடுத்து மகாத்மா காந்தியடிகளின் அகிம்சையின் புனிதமான கொள்கையை ஏற்றார்.தாய் தந்தையரின் ஆதரவை இழந்து அழுத ஞானசம்பந்தருக்கு அம்மையே தாயாக வந்து பால் புகட்டியதைப் போல நாட்டுக்காகப் போராடியதால் பெற்றோர்களால் கைக்கப்பட்ட இவரை, வேலார் பாபாாவ் தெருவில் வசித்து வந்த தியாகிகள் திரு.கோடையிடி குப்புசாமி முதலியார்,ஜனாப் உபயதுல்லா சாயபு,தகரலோட்டா மாணிக்க முதலியார்,ஆர்.ஜீவரத்தினம், எஸ்.சோமசுந்தரஐயர்,ஜமதக்கினி வி.எம்.இராமானுஜம் ஆகியோரின் நட்பு கிடைத்தது.முதலில் இவரை மேடைகளில் தேசபக்திப் பாடல்கள் பாடுவதற்காக காங்கிரஸ் பேரியக்கம் பயன்படுத்தியது. அதன்பின் படிப்படியாக காங்கிரஸ் பேரியக்கத்தின் சிறந்த மேடைப்பேச்சாளராக வளர்ந்து வேலூர் சிம்மக்குரலோன் தியாகி வி.எம். முனுசாமி என தேசத்தலைவர்களால் பாராட்டப்பட்டார் இவர்தம் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவங்களாக மகாத்மா காந்தியடிகள் அவர்களை சென்னையில் இந்து பிரசார சபா ஆண்டு விழாவில் சந்தித்ததையும்,ஆசியாவின் ஜோதி பண்டிட் ஜவஹர்லால் அவர்களை சென்னை ஆவடி காங்கிரஸ் மாநாடு மற்றும் நேரு அவர்களின் வேலூர் சுற்றுப் பயணத்தின் போதும் இருமுறை சந்தித்ததையும் கருதினார்

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

தொகு
 
தாமிரபத்திரம் மத்திய அரசால் வழங்கப்பட்டது

1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 ஆம் நாள் பம்பாய் நகரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தியடிகள் அறிவித்த வெள்ளையனே வெளியேறு” என்ற தீர்மானத்தை நிறைவேற்றி வெள்ளையர் வெளியேறும் வரை 'போராடுங்கள் அல்லது செத்து மடியுங்கள்' என்ற கோஷத்தை அறிவித்தார்.இதன்படி வேலூர் நகரத்திலும் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதை அறிந்த ஆங்கில அரசு வேலூர் நகரத்தில் இருந்த முக்கியத் தலைவர்கள் அனைவரையும் கைது செய்தது. நம் தியாகி வி.எம். முனுசாமி அவர்கள் ஒரே நேரத்தில் பல பகுதிகளில் இருந்தும் ஊர்வலம் புறப்பட்டு வரவேண்டும் என்று அதற்குரிய துணிவுள்ள வாலிபர்களையும் வீரத்தாய்மார்களையும் திரட்டி 1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாள் வெள்ளையனே வெளியேறு' என்ற கோஷத்தை எழுப்பிக் கொண்டு வந்தனர்.ஆங்கிலேயரின் அடக்குமுறைகள் ஆவேசமாக பல இடங்களில் காட்டுமிராண்டித்தனமாக நடைபெற்றன.சுமார் இரண்டாயிரம் பேர் கொண்ட ஊர்வலத்திற்கு தலைமை தாங்கி நம் தியாகி வி.எம். முனுசாமி அவர்கள் பாபுராவ் தெருவிலிருந்து வீறுகொண்ட சிம்மம் போல் வீர நடைபோட்டு மெயின் பஜார் வந்துள்ளார். அங்கு ஆங்கில அரசின் கொடூரமான தாக்குதலால் மெயின் பஜார் ரோடு முழுவதும் ரத்தக் காயங்களுடன் வீழ்ந்துள்ள நபர்களும், ரத்தம் ஆறாக ஓடியதையும் அவர் என்னிடம் விவரித்த மெயின் பஜார் ரோட்டில் வீழ்ந்து கிடந்த எண்ணற்ற உயிரிழந்த,உடல்களும் கை, கால் இழந்து துடிப்போர் ஆகியவர்களைக் கண்டும் சற்றும் கலங்காமல் போராட்டத்தை வழிநடத்திச் சென்றார். நம் தியாகி அவர்கள் ஊர்வலத்தை நடுவில் தடுத்த ஆங்கிலேய அதிகாரிகள் கலைந்து செல்லுங்கள்' இல்லையேல் அனைவரையும் சுட்டுவிடுவோம் என மிரட்டினர்.உடனே நம் தியாகி அவர்கள் முதலில் என்னை சுட்டுவிட்டு பிறகு மற்றவர்களைச் சுடுங்கள் என ஆவேசத்தோடு தான் அணிந்திருந்த ஜிப்பாவை இரண்டாகக் கிழித்து சுடுங்கள் என அதிகாரியின் முன் நின்றார்.இவர்தான் தலைமை தாங்குகிறார் என்பதை அறிந்த ஆங்கிலேய காவலர்கள் அனைவரும் இவரைச் சூழ்ந்து கடுமையாகத் தாக்கினார்கள். இறுதியில் உயிர் போய்விட்டது என நினைத்து லாரியில் தூக்கிப் போட்டு விட்டனர்.இவரோடு தியாகிகள் திரு. ஸ்ரீராமுலு, பாபுராவ் தெரு திரு இலட்சுமணன், திரு. விநாயகம், திரு.சண்முகம், திரு. பச்சையப்பன் திரு.மாணிக்கம், திரு. மணி ஐயர், திரு.கணபதி, திரு தட்சிணாமூர்த்தி ஆச்சாரி ஆகிய அனைவரையும் மூன்று நாட்களாக ஆகாரமின்றி,குடிக்க தண்ணீர் கூடத் தராமல் வைத்திருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு நீதிமன்றம் அழைத்துச் சென்றனர்.நீதிமன்றத்தில் இவர்கள் தேசத்துரோகிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டனர்.நீதிபதி இவர்களைப் பார்த்து உங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு என்ன பதில் கூறுகின்றீர்கள் எனக் கேட்டதற்கு நம் தியாகி அவர்கள் நீங்கள் ஒரு அடிமை இந்தியாவின் நீதிபதி.உங்களுக்கு பதில் சொல்லத் தயாராக இல்லை. நீங்கள் கொடுக்கும் தண்டனை எதுவானாலும் ஏற்கத் தயார்” என்றார்,இதனால் ஏழுமாத கடுங்காவல் சிறைத் தண்டனை பெற்றார் மேலும் தண்டனை ஆணையில் குற்றவாளிகளுக்கு சிறையில் சோறு அளிக்காமல் மூன்று வேளையும் களி, கஞ்சி கொடுக்க வேண்டும் என்ற கடுமையான தீர்ப்பு அளித்தார்.சிறையில் தோட்டி வேலை முதல் தோட்ட வேலை வரை செய்ய வேண்டும் தவறினால் சிறைவார்டர்களால் கடுமையாகத்தாக்கப்படுவார்கள்.சிறையில் தியாகிகள் கல்உடைத்து சித்திரவதைப்படுவதை அறிந்த பொதுமக்கள் சினம் கொண்டு கிளர்ச்சியில் ஈடுபட்டனர் இதனால் சிறையில் உள்ளவர்களை இரவோடு இரவாக ஆந்திராவில் உள்ள பெல்லாரிசிறைக் காவலர்கள் அடித்த அடியில் தியாகி ஸ்ரீராமுலு என்பவருக்கு மலமே வெளி வந்துவிட்டது என்றால், இதையெல்லாம் அவர் சொல்லக் கேட்டபோது அந்த சிறுவயதிலேயே எனக்கு கண்ணீர் வந்தது என்றால் அதில் வியப்பில்லை.4000 பேர் உள்ள அச்சிறையில் தினமும் இரண்டு மூன்று பேர் இறப்பார்களாம்.அவர்களின் உடல்களை இரவில் மறைவான இடத்தில் வைத்துவிட்டு பகலில் ஒரே குழியில் மூன்று நான்கு இறந்த உடல்களைப் போட்டு புதைத்து விடுவார்கள், இத்தகைய கொடுமைகளை அல்லிபுரம் சிறையில் அனுபவித்து விடுதலையான நம் தியாகி அவர்கள் விடுதலையானதும், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்கள் காங்கிரஸ் பிரசார கமிட்டி உறுப்பினராகச் சேர்த்து உத்தரவிட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Brahm perkash (1967). Fifth indian cooperative congress. Nation cooperative union of india. p. 340.
  2. The University of California (1973). Who's who of Freedom Fighters,Tamil Nadu,Volume one. SN publication. p. 15.
  3. M.Samy (1998). Indiya viduthalai por. Navamani pathippakam. p. 344.
  4. M C Campantan (1987). Tamil ithalil Varalaru. Tamilar Pathippagam. p. 99,104.
  5. The heroic Vellore port edited Thirumalai kamalanathan pages 109-112 New century Publications,isbn 9789388973311
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._எம்._முனுசாமி&oldid=4088996" இலிருந்து மீள்விக்கப்பட்டது