வி. ஏழுமலை
வி. ஏழுமலை ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போது நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்நாட்டின், ஆரணி மக்களவைத் தொகுதியிலிருந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 2014 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
வி. ஏழுமலை | |
---|---|
இந்திய நாடாளுமன்றம் | |
தொகுதி | ஆரணி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 3 மே 1955 அன்னமங்கலம், விழுப்புரம், தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | திருமதி. இராஜராணி |
பிள்ளைகள் | 2 |
இருப்பிடம் | விழுப்புரம், தமிழ்நாடு |
படித்த கல்வி நிறுவனங்கள் | மதராசு சட்டக் கல்லூரி |
பணி | வழக்கறிஞர் |
As of 17 திசம்பர், 2016 Source: [1] |
இவர் செஞ்சி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் (வடக்கு) எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக 2014 இல் இருந்து செயல்பட்டு வருகிறார். இவரின் சொந்த ஊர் செஞ்சிக்கு அருகே உள்ள அன்னமங்கலம் ஆகும்.[2]
மேற்கோள்கள்தொகு
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 22 May 2014.
- ↑ "Jayalalithaa Picks Educated Quartet for 4 Seats in Tiruvannamalai, Vellore". The New Indian Express. 25 February 2014. http://www.newindianexpress.com/states/tamil_nadu/Jayalalithaa-Picks-Educated-Quartet-for-4-Seats-in-Tiruvannamalai-Vellore/2014/02/25/article2076534.ece. பார்த்த நாள்: 22 May 2014.