வி. கே. கார்க்

வி. கே. கார்க் என்பவர் பதிண்டாவில் உள்ள பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பூமி அறிவியல் பள்ளியின் புலத்தலைவர் ஆவார்.[1] இவர் பஞ்சாப் நடுவன் பல்கலைக்கழக மாணவர் நல பொறுப்பாளர் ஆவார். இவர் 2014 சனவரி-பிப்ரவரியில் ஆத்திரேலியாவின் ஜீலாங்கின் டீக்கின் பல்கலைக்கழகத்தின் வருகை தரும் விஞ்ஞானியாகவும், 2015-ல் லோசான், சுவிட்சர்லாந்து சென்றுவந்தார்.[2][3]

வி. கே. கார்க்
தேசியம் இந்தியர்
மற்றவை பெயர்கள் வினோத் குமார் கார்க்
கல்வி முனைவர் பட்டம்

கல்வி மற்றும் தொழில்

தொகு

கார்க் 1985-ல் குருச்சேத்திரப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டப்படிப்பினை உயிரியலில் முடித்தார். 1987ல் முது அறிவியல் பட்டத்தினை வேதியியலில் ஹிசார், செளதரி சரண் சிங் அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் முடித்து, பின்னர் 1992-ல் முனைவர் பட்டத்தினை முடித்தார்.[4] கிசார், செளதரி சரண் சிங் அரியானா வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண்மைத் துறையில் உதவி விஞ்ஞானியாக (1992-1996) தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் இவர் சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில், குரு ஜம்பேசுவர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில், இணைப் பேராசிரியராகவும் (1996-2004), பேராசிரியராகவும் (2004-2016) பணியாற்றினார்.[5] இவர் 2016-ல் பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாறினார். இங்கு இவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.[6]

ஆய்வுப் பணி

தொகு

கார்க் 7 முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார். சுமார் 150 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

தொகு
  • 2007-எல்செவியரால் சிறந்த மதிப்பாய்வாளர் விருது.
  • 2010-ல், எல்செவியரிடமிருந்து சிறந்த மதிப்பாய்வாளர் விருது.
  • 2011-ல், இந்தியாவின் உயிரித்தொழில்நுட்ப சமூக ஆராய்ச்சிப் பணிக்கான மிக உயர்ந்த மேற்கோள்களுக்கான விருதைப் பெற்றார்.
  • 2012-ல், தாம்சன் ராய்ட்டர்ஸ் இந்தியா மேற்கோள் விருது.
  • 2013-ல், எல்செவியரிடமிருந்து சிறந்த மதிப்பாய்வாளர் விருது[7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Indian Research Information Network System".
  2. "Solid and hazardous Waste Management - Course". onlinecourses.swayam2.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  3. "Professor | Central University of Punjab". www.cup.edu.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
  4. "Professor | Central University of Punjab". cup.edu.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.
  5. "GJUST Biodata of Prof. Garg" (PDF).
  6. "Prof. V. K. Garg| Central University of Punjab". cup.edu.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.
  7. "CUPB Prof. V. K. Garg CV" (PDF).

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._கார்க்&oldid=3763042" இலிருந்து மீள்விக்கப்பட்டது