வி. கே. திருவேங்கடாச்சாரி
வங்கல் கிருஷ்ணமாச்சாரி திருவெங்கடாச்சாரி (Vangal Krishnamachari Thiruvenkatachari ) (30 சனவரி 1904 - 23 சனவரி 1984) என்பவர் இந்திய வழ்கறிஞராவார். இவர் 1951 முதல் 1964 வரை சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவர் ஐ.சி.எஸ் அதிகாரியான சர் வி. டி. கிருஷ்ணமாச்சாரியின் மூத்த மகனாவார்.
வங்கல் கிருஷ்ணமாச்சாரி திருவெங்கடாச்சாரி | |
---|---|
சென்னை மாநிலத்தின் அரசு தலைமை வழக்கறிஞர் | |
பதவியில் 1950–1964 | |
முன்னையவர் | கே. ராஜா ஐயர் |
பின்னவர் | என். கிருஷ்ணசாமி ரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சனவரி 1904 |
இறப்பு | 23 சனவரி 1984 | (அகவை 79)
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் திருவரங்கத்தில் வி. டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் ரங்கம்மல் இணையருக்கு மகனாக 1904 சனவரி 30 அன்று பிறந்தார். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார் . கல்வியை முடித்ததும் எஸ். ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் சர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோரிடம் பயிற்சி வழக்கறிஞராக இருந்தார். 1950 ஆம் ஆண்டில், புதிதாக அமைக்கப்பட்ட இந்திய குடியரசில் நிறுவனங்கள் சட்டம் குறித்து இவரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
பிற செயல்பாடுகள்
தொகுவழக்கறிஞர் பணிகளைத் தவிர, விவேகானந்தா கல்லூரி, வித்யா மந்திர், மற்றும் தன்னார்வ சுகாதார சேவை ஆகியவற்றை நிறுவுவதில் திருவென்கட்டாச்சாரி முக்கிய பங்கு வகித்தார்.
குடும்பம்
தொகுதிருவெங்கடாச்சாரி பத்மினி என்பவரை மணந்தார் (1910-1995). இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன:
- சீதா நரசிம்மன்
- டி. கிருஷ்ணன்
குறிப்புகள்
தொகு- "Descendants of Satagopa Iyengar". V. L. Vijayaraghavan.