வி. டி. கிருஷ்ணமாச்சாரி

இந்திய அரசியல்வாதி, இந்தியக் குடியுரிமைப் பணியாளர்

வாங்கல் திருவேங்கடாச்சாரி கிருஷ்ணமாச்சாரி அல்லது வி. டி. கிருஷ்ணமாச்சாரி (Vangal Thiruvenkatachari Krishnamachari) (8 பிப்ரவரி 1881 – 14 பிப்ரவரி 1964), சட்டப் படிப்பு மற்றும் இந்தியக் குடியியல் பணிகள் முடித்த இவர், பரோடா இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1927 முதல் 1944 வரையிலும்[1], பின்னர் ஜெய்பூர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1946 முதல் 1949 முடிய பனியாற்றியவர். மேலும் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.[2]

வாங்கல் திருவேங்கடாச்சாரி கிருஷ்ணமாச்சாரி
இந்தியத் திட்டகுழுத் துணைத் தலைவர்
பிரதம அமைச்சர், ஜெய்பூர் இராச்சியம்
பதவியில்
1946–1949
பிரதம அமைச்சர், பரோடா இராச்சியம்
பதவியில்
1927–1944
ஆட்சியாளர்மூன்றாம் சயாஜிராவ் கெயிக்வாட்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 பிப்ரவரி 1881
வாங்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டம், பிரித்தானிய இந்தியா
இறப்பு14 பெப்ரவரி 1964(1964-02-14) (அகவை 83)
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ரங்கம்மாள்
பிள்ளைகள்வேதம்மாள் கோபால அய்யங்கார்
வி. கே. திருவேங்கடச்சாரி,
வி. கே. ரங்கசாமி,
ஜெயம்மாள் ஸ்ரீநிவாசன்,
வி. கே. ராமசாமி (1928–1969)
முன்னாள் கல்லூரிமாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரி
வேலைவழக்கறிஞர், அரசு உயர் அலுவலர் & அரசியல்வாதி

பின்னர் 1961 முதல் 1964 முடிய இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.

இளமை

தொகு

தற்கால கரூர் மாவட்டத்தின், வாங்கல் கிராமத்தில் 8 பிப்ரவரி 1881ல் பிறந்த தி. கிருஷ்ணமாச்சாரி, பள்ளிப் படிப்பை வாங்கல் கிராமத்திலும், கல்லூரி மற்றும் பட்டப்படிப்பை முறையே, மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்தவர்.

இந்தியக் குடியியல் பணிகள்

தொகு

இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற வி. டி. கிருஷ்ணமாச்சாரி, 1913 முதல் 1919 முடிய சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] வருவாய்த் துறையின் கூடுதல் செயலாளாராகவும், பின்னர் விஜயநகரம் எஸ்டேட்டின் காப்பாளராக 1919 முதல் 1922 முடிய பணியாற்றினார்.

சுதேச சமஸ்தானங்களின் பிரதிநிதி

தொகு

பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த அனைத்து சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான ஜெய்பூர் இராச்சியத்தின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

படைப்புகள்

தொகு
  • V. T. Krishnamachari (1949). Speeches of V. T. Krishnamachari, Diwan, Jaipur State. Information Bureau.
  • V. T. Krishnamachari (1952). Report on Indian and State Administrative Services and Problems of District Administration. Government of India.
  • V. T. Krishnamachari (1958). Community Development in India. Government of India.
  • V. T. Krishnamachari (1959). Planned Development and Efficient Administration. Government of India.
  • V. T. Krishnamachari (1961). Planning in India. Orient Longman.

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Vijay Kumar (2011). Integrated Rural Development Program and Its Impact on the Socio-Economic Condition of the Rural Poor of Sitamarhi District. Xilbris Corporation. p. 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4568-4699-2.
  2. Constituent Assembly Debates, Session 3, 28 April 1947.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._டி._கிருஷ்ணமாச்சாரி&oldid=3926762" இலிருந்து மீள்விக்கப்பட்டது