வி. கே. நீலாராவ்

வி. கே. நீலாராவ் (V. K. Neelarao). சௌராட்டிர மொழி அறிஞரும்[1], சௌராட்டிரா மொழி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநரும், சௌராட்டிரா மொழி பத்திரிகையாளரும், இசை அமைப்பாளரும் ஆவார்.[2] இவர் வைத்தியம். வெ. குப்புசாமி பாகதவருக்கு மகனாக 1946-இல் மதுரையில் பிறந்தார்.

இவர் முதன்முதலாக 1969-இல் ஹொராட் வநொ எனும் முழு நீள சௌராட்டிர மொழி மேடை நாடகத்தை, பிற மொழிக் கலப்பின்றி, சௌராட்டிரா மொழியில் எழுதி, இயக்கி நடித்தார்.[3] இவர் நொவ்ரோகோன்? மற்றும் “ஹெட்டெ ஜொமை (அசட்டு மாப்பிள்ளை) (Hedde Jamoi) எனும் முழு நீள சௌராட்டிர மொழி திரைப்படங்களுக்கு கதை, வசனம், பாடல்கள், இசை அமைத்தும், இயக்கியும் வெளியிட்டார்.[4] [5] பின்னர் பரமக்குடி, பாளையம்கோட்டை, சேலம், சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் உள்ள திரையரங்குகளிலும் திரையிட்டார்.

இவர் மேலும் சொவ்னோ (கனவு), நொவ்வோ ஜிவ்வனம் (புது வாழ்க்கை), ஶ்ரீமதி ஹொராடு (ஶ்ரீமதியின் கல்யாணம்), ஶ்ரீமன்நாயகி தேவுன், சொக்கட் தின்னு (நல்ல நாள்), திவோ ஹொராட் (இரண்டாம் திருமணம்), ஹொவ்ரோ கோன் (மாப்பிள்ளை யார்) மேடை நாடகங்களை எழுதி, இயக்கினார்.

மேலும் இவர் நடனகோபாலநாயகி சுவாமிகள் மற்றும் வேங்கடசூரி சுவாமிகள் ஆகியோரின் சௌராட்டிர மொழி மற்றும் தமிழ் கீர்த்தனைகளை இசை அமைத்து பாடியதுடன், இசைத் தட்டுகளாகவும் வெளியிட்டுள்ளார். [6]

மேலும் இவர் சௌராட்டிர மொழியின் வளர்ச்சிக்காக சுரீத் (SURITH) எனும் சௌராட்டிரா சமூக மாத இதழின் பதிப்பாசிரியராக, சௌராட்டிரம் மற்றும் தமிழ் மொழிகளில் 1979 முதல் 1999 முடிய இருபதாண்டுகள் வெளியிட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Custodians safeguard Saurashtra language
  2. Custodians safeguard Saurashtra language
  3. Horot Hono Full Movie
  4. சென்சார் போர்டு சான்றிதழ் பெற்ற முதல் சௌராஷ்டிரா மொழி திரைப்படம்
  5. Listen: What Do We Lose When We Lose a Language?
  6. நடனகோபாலநாயகி சுவாமிகளின் கீர்த்தனகளை பாடிய வி. கே. நீலாராவ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._நீலாராவ்&oldid=3088670" இலிருந்து மீள்விக்கப்பட்டது