முதன்மை பட்டியைத் திறக்கவும்

வி. கே. பஞ்சமூர்த்தி

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

வி. கே. பஞ்சமூர்த்தி பிரபல நாதஸ்வர மேதை வி. கோதண்டபாணிக்கும், இராஜேஸ்வரிக்கும் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் பிறந்தார். இவரின் ஆரம்ப குரு பேரனார் மூளாய் ஆறுமுகம்பிள்ளை, இணுவில் கந்தசாமிப்பிள்ளை, தந்தை அமரர் கோதண்டபாணி. அதன் பின் தமிழகம் சென்று ஆண்டார்கோயில் ஏ. வி. செல்வரத்தினம்பிள்ளை, அமரர் குளிக்கரை பிச்சையப்பாபிள்ளை ஆகியோரிடம் இவர்களிடம் குருவாசம் பெற்று நாதஸ்வரக் கலையை முறையாகப் பயின்று நாடு திரும்பினார்.

கானமூர்த்தி-பஞ்சமூர்த்தி இரட்டையர்தொகு

இவரின் தமையனார் கலாபூஷணம் வி. கே. கானமூர்த்தி. இவர்கள் இருவரும் 33 ஆண்டுகள் இரட்டையர்களாக நாதசுவரம் வாசித்தவர்கள். இவர்கள் இலங்கையில் பல பாகங்களிலும், தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல பாகங்களுக்கும் சென்று பாராட்டும், புகழும் பெற்றவர்கள் ஆவர்.

மார்ச் 23, 1989 இவர்கள் இருவரும் நாதஸ்வர இசைத்துறையில் பிரவேசித்த வெள்ளிவிழாவை கம்பன் கழகம், யாழ் பல்கலைக்கழகம் கைலாசபதி அரங்கில் விழாவாக நடத்தியது.

இவர்கள் பல்லாண்டுகளாக பல சைவ ஆலயங்கள், திருமணச் சடங்குகள் என இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று நாதஸ்வரம் வாசித்து பெரும் விருதுகள், பாராட்டுகள், கௌரவங்கள் என பெற்றார்கள்.

இன்றைய தவில் வித்துவான்கள் திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, மன்னார்க்குடி வாசுதேவன், திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி போன்ற பலருடன் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாசித்து வருகிறார்கள்.

பெற்ற விருதுகளும் பட்டங்களும்தொகு

  • நாதஸ்வர இசைமணி - நயினை நாகபூஷணி தேவஸ்தானம் (1963)
  • நாதகான வாருதி
  • நாதஸ்வர இளவரசன்
  • நாதகான சுரபி
  • இன்குழல் வேந்தன்
  • நாதஸ்வர சிரோன்மணி
  • நாதஸ்வர இசையருவி
  • நாதஸ்வரக் கலாநிதி (2007)

பஞ்சமூர்த்தியின் பாரியார் ஜெயராணி மறைந்த நாதஸ்வர மேதை அப்புலிங்கம் பிள்ளையின் மகள். மகன் குமரேஸ் (பி. ஆகஸ்ட் 14, 1984. இவரும் ஒரு சிறந்த நாதசுரக் கலைஞர்.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._கே._பஞ்சமூர்த்தி&oldid=1783738" இருந்து மீள்விக்கப்பட்டது