வி. சாந்தா

இந்திய புற்றுநோய் மருத்துவர், தமிழ்ப்பெண் மருத்துவர்

மருத்துவர் வி. சாந்தா (Dr. V. Shanta, மார்ச் 11, 1927 – சனவரி 19 , 2021) இந்தியாவின் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணர் ஆவார். இவர் சென்னை அடையாறு புற்றுநோய்க் கழகத்தின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் மக்சேசே விருது, பத்மசிறீ, பத்ம விபூசண் போன்ற புகழ்பெற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அடையாறு புற்றுநோய்க் கழகத்திலே 1955 ஆம் ஆண்டில் பணியில் இணைந்த இவர், அதில் பல முக்கிய பதவிகளில் பணியாற்றினார். 1980 முதல் 1997 வரை அதன் இயக்குனராகப் பணியாற்றினார். உலக சுகாதார அமைப்பில் சுகாதாரம் குறித்த ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பத்ம பூசண் விருது பெறுகிறார் மரு. வி. சாந்தா (2006 மார்ச் 20).

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

சென்னையில் மைலாப்பூரில் பிறந்தவர் சாந்தா. பி. எஸ். சிவசாமி பெண்கள் உயர் பள்ளியில் கல்வி கற்ற இவர் 1949-இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார். 1955 இல் எம்.டி பட்டம் பெற்றார்.

படைப்புகள்

தொகு
  • My Journey, Memories, V Shanta எனும் நூல், தமிழில் பத்மநாராயணன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது [1].

விருதுகள்

தொகு

மறைவு

தொகு

மரு. வி. சாந்தா தனது 94-வது அகவையில் 2021 சனவரி 19 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.[6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.thehindu.com/books/books-reviews/the-emperor-can-be-killed/article4428898.ece
  2. 2.0 2.1 "Padma Awards Directory (1954-2013)" (PDF). MINISTRY OF HOME AFFAIRS. Archived from the original (PDF) on 2014-11-15. பார்க்கப்பட்ட நாள் 2016-04-19.
  3. Nayudamma award for Dr. Shanta, த இந்து, பெப்ரவரி 20, 2011
  4. தமிழ்நாடு அரசின் செய்திவெளியீடு எண்:150, நாள்: 07-03-2013
  5. "Padma Awards 2016". Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2016.
  6. `அடையாற்றின் மற்றோர் ஆலமரம்’... மருத்துவர் சாந்தா காலமானார்!, விகடன்.காம், சனவரி 19, 2021
  7. மருத்துவர் சாந்தா காலமானார்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சாந்தா&oldid=3751066" இலிருந்து மீள்விக்கப்பட்டது