வீனா தாசு (Veena Das)(பிறப்பு 1945) இந்தியாவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் க்ரீகர்-ஐசனோவர் மானுடவியல் பேராசிரியராக உள்ளார். இவரது கோட்பாட்டு நிபுணத்துவத்தின் பகுதிகளில் வன்முறையின் மானுடவியல்,[1] சமூக துன்பம்,[2] மற்றும் அரசு ஆகியவை அடங்கும். தாசு ஆண்டர் ரெட்சியசு தங்கப் பதக்கம் உட்படப் பல பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். மதிப்புமிக்க லூயிசு என்றி மோர்கன் விரிவுரையும் இவர் நிகழ்த்தியுள்ளார். அமெரிக்கக் கலை மற்றும் அறிவியல் அகாதமியின் வெளிநாட்டுக் கௌரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி

தொகு

தாசு தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திரபிரஸ்தா பெண்களுக்கான கல்லூரியிலும், தில்லி பொருளாதாரப் பள்ளியிலும் படித்து 1967 முதல் 2000 வரை இங்குக் கற்பித்தலில் ஈடுபட்டார். தில்லி பொருளாதாரப் பள்ளியில் எம். என். சீனிவாஸ் மேற்பார்வையில் 1970ல் தனது முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு, 1997 முதல் 2000 வரை சமூக ஆராய்ச்சிக்கான புதிய பள்ளியில் மானுடவியல் பேராசிரியராக பணியாற்றினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் 2001 மற்றும் 2008க்கு இடையில் மானுடவியல் துறையின் தலைவராக பணியாற்றினார்.[3]

புத்தகங்கள்

தொகு

தாசு தனது முதல் புத்தகம், அமைப்பு மற்றும் அறிவாற்றல்: இந்து சாதி மற்றும் சடங்குகளின் அம்சங்கள் (Structure and Cognition: Aspects of Hindu Caste and Ritual)(ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், தில்லி, 1977) என்பதாகும். இது 13 முதல் 17 ஆம் நூற்றாண்டின் சாதி குழுக்களின் சுய பிரதிநிதித்துவம் நடைமுறை தொடர்பானது.

வீணா தாசின் இரண்டாவது புத்தகம் லைஃப் அண்ட் வார்ட்ஸ்: வயலன்ஸ் அண்ட் தி டீசன்ட் இன் தி ஆர்டினரி (Life and Words: Violence and the Descent into the Ordinary)(கலிபோர்னியா பல்கலைக்கழக அச்சகம், 2006) என்பதாகும்.

விருதுகள்

தொகு

தாசு 1995-இல் மானுடவியல் மற்றும் புவியியலுக்கான சுவீடன் சமூக ஆண்டர்ஸ் ரெட்சியசு தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.[4][5] 2000ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகம் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கியது. தாசு அமெரிக்கக் கலை அறிவியல் அகாதமியின் வெளிநாட்டுக் கவுரவ உறுப்பினர் ஆனார்.[6] மூன்றாம் உலக அறிவியல் அகாதமியின் உறுப்பினராகவும் தாசு உள்ளார். 2007-இல், தாசு இரோசெச்டர் பல்கலைக்கழகத்தில் லூயிசு என்றி மோர்கன் விரிவுரையை நிகழ்த்தினார். மானுடவியல் துறையில் மிக முக்கியமான வருடாந்திர விரிவுரைத் தொடராக இது கருதப்படுகிறது.[7] பேராசிரியர் தாசு 2019-இல் இங்கிலாந்து அகாதமியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Martin, Emily (2007). "Review essay: Violence, language, and everyday life". American Ethnologist 34 (4): 741–745. doi:10.1525/ae.2007.34.4.741. https://archive.org/details/sim_american-ethnologist_2007-11_34_4/page/741. 
  2. Green, Linda (1999). "Reviewed work: Social Suffering, Arthur Kleinman, Veena Das, Margaret Lock". Medical Anthropology Quarterly 13 (3): 375–377. doi:10.1525/maq.1999.13.3.375.2. https://archive.org/details/sim_medical-anthropology-quarterly_1999-09_13_3/page/375. 
  3. "Anthropology's 70th Anniversary" (PDF). Archived from the original (PDF) on 9 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Named Deanships, Directorships, and Professorships".
  5. "The University of Chicago Magazine: December 2000, Features".
  6. "Members".
  7. "Matory To Join Duke Faculty". பார்க்கப்பட்ட நாள் 31 December 2021.
  8. "Professor Veena Das FBA". பார்க்கப்பட்ட நாள் 20 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீணா_தாசு&oldid=4108449" இலிருந்து மீள்விக்கப்பட்டது