வீணா (நடிகை)
வீணா (Veena) (1926 சூலை 4 - 2004 நவம்பர் 14) வீணா குமாரி என்றும் அழைக்கப்படும் இவர், ஓர் இந்திய நடிகையாவார். இவரது உண்மையான பெயர் தாஜூர் சுல்தானா என்பதாகும். இவர், தனது 41 ஆண்டுகள் (1942-1983) தொழில் வாழ்க்கையில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
வீணா | |
---|---|
பிறப்பு | தாஜூர் சுல்தானா 4 சூலை 1926 குவெட்டா, பலூசிஸ்தான், பிரித்தானிய இந்தியா (தற்போது பாக்கித்தான்) |
இறப்பு | 14 நவம்பர் 2004 மும்பை, மகாராட்டிரம், இந்தியா | (அகவை 78)
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1939–1983 |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
தொகுதாஜூர் சுல்தானாவாக 1926 சூலை 4 அன்று பிரித்தானிய இந்தியாவின் (தற்போது பாக்கித்தான்) பலூசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டாவில் பிறந்தார். ஒரு கட்டத்தில், இவரது குடும்பம் லாகூருக்கு மாறியது. இவர் லாகூரின் சுனா மண்டியைச் சேர்ந்தவர்.[1] இவர் நடிகர் அல் நசீர் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
தொழில்
தொகுஇந்தியப் பிரிப்புக்கு முந்தைய படங்களில் கதாநாயகி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். கரிப், காவந்தி (1942) ஆகிய படங்களில் தனது பதினாறு வயதில் அறிமுகமானார். கரிப் உருது மொழியிலும், காவந்தி பஞ்சாபியிலும் தயாரிக்கப்பட்டு மெஹபூப் கான் என்பவர் இயக்கியிருந்தார். கரிப், படத்தில் இவர் லதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். காவந்தி படத்தில் நாயகனாக நடித்த ஷியாம் என்பவருக்கு கதாநாயகியாக நடித்தார். இந்தியப் பிரிப்புக்கு முந்தைய இந்தி மற்றும் உருது படங்களில் நடித்ததற்காக இவர் பிரபலமானார். திரைப்படங்களில் இவரது ஆரம்ப ஆண்டுகள் நஜ்மா (1943), பூல் (1945) மற்றும் ஹுமாயூன் (1945) போன்ற படங்களுடன் இருந்தன. இந்தியப் பிரிவினைக்கு முன்னர் இவரது கடைசி படம் ராஜ்புதானி (1946), இதில் இவர் ஒரு துணை வேடத்தில் நடித்தார். பிரிவினைக்குப் பிறகு இவர் இந்தியாவில் இருக்க முடிவு செய்தார். மேலும் 1940கள், 1950கள், 1960கள், 1970கள், 1980களின் முற்பகுதி வரை இவர் நடித்தார். ஹலகு (1956), சல்தி கா நாம் காடி (1958), காகாஸ் கே பூல் (1959), தாஜ்மஹால் (1963) (இதற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்), டோ ரஸ்தே (1969), பக்கீசா (1972). ரசியா சுல்தான் (இதில் இவர் பேரரசி ஷா துர்கானாக நடித்தார்) (1983) போன்ற வெளியீட்டிற்குப் பிறகு 1983 ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார்.
இறப்பு
தொகுதிரையுலகிலிருந்து 21 வருட ஓய்வுக்குப் பிறகு 2004ஆம் ஆண்டில் மும்பையில் தனது 78 வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Veena Profile, Cineplot, 14 March 2016, பார்க்கப்பட்ட நாள் 14 March 2016
- Veena Profile cineplot