வீம இரதம், மாமல்லபுரம்

வீம இரதம் என அழைக்கப்படும் தளியானது மாமல்லபுரத்தில் உள்ள நரசி்ம்மவர்மன் பாணியில் அமைந்த புகழ்பெற்ற கற்றளிகளுள் ஒன்றாகும். இது அருச்சுன இரதம் எனும் தளிக்கு தெற்கில் அமையப் பெற்றுள்ளது. நீண்ட சதுரமுடைய பெரிய பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயிலாகும். இது ஒரு திருமால் கோயில். கிடந்த நிலையில் உள்ள திருமாலின் வடிவமான பள்ளிகொண்ட பெருமாளுக்காகவே இந்தக் கோயில் அமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.[1]

மாமல்லபுரத்திலுள்ள வீம இரதம்

அமைப்பு

தொகு
 
வீம இரதம். பக்கத் தோற்றம்.

நீண்ட சதுரமான மண்டபத்தையும் அதன் மேல் படகு ஒன்றினைக் கவிழ்த்து வைத்தது போன்ற விமானத்தையும் கொண்டு அமைந்துள்ளது. இதன் நான்கு புறத்திலும் தாழ்வாரம் எனும் அமைப்பு காணப்படுகின்றது. அமைப்பில் சிதம்பரம் நடராஜப் பெருமானின் ஆலயத்தை ஒத்திருப்பது என்பர். இத் தளியின் மேற்பகுதி மட்டும் நன்றாக அமைக்கப்பட்ட கோலத்தில் உள்ளது. கீழ்ப்பகுதி முற்றுப் பெறாமல் அரைகுறையாகவே விடப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி பாறையில் வெடிப்புகள் காணப்படுவதால் இவ்வாறு அரைகுறையாக விடப்பட்டிருக்க வேண்டும். விமானம் வேசர வகையைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக்.68, 69.

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீம_இரதம்,_மாமல்லபுரம்&oldid=3296248" இலிருந்து மீள்விக்கப்பட்டது