வீரசிங்கம் துருவசங்கரி

வீரசிங்கம் துருவசங்கரி (செப்டம்பர் 5, 1950 - டிசம்பர் 2, 2006) இலங்கையைச் சேர்ந்த ஓர் அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளரும் மண் ஆராய்ச்சியாளரும் ஆவார். தொலைக்காட்டியாகவும் நுணுக்குக்காட்டியாகவும் பாவிக்கக்கூடிய கருவியொன்றை வடிவமைத்தார்[1]. அத்துடன் சூரிய அடுப்பு, பனிக்கட்டி, பனிமழை போன்றவற்றை அளக்கும் கருவிகளையும் கண்டுபிடித்தார்.

வாழ்க்கைக் குறிப்புதொகு

யாழ்ப்பாணம், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட துருவசங்கரி புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் ச. வீரசிங்கம் - அன்னப்பாக்கியம் தம்பதியருக்கு 12வது மகவாகப் பிறந்தார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியின் சகோதரர் ஆவார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் வேளாண்மைத் துறையில் முதுமாணி (MSc) பட்டத்தை 1977 இல் மொஸ்கோ லுமும்பா பல்கலைக்கழகத்தில் பெற்றார்.

பட்டப்படிப்பை முடித்து இலங்கை திரும்பிய துருவசங்கரி இலங்கையில் மகாவலித் திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். பின்னர் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர் அங்கு பல அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அத்துடன் பல அறிவியல் இதழ்களுக்கு ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

வெளியிட்ட நூற்கள்தொகு

  • Research Articles on Palymyrah Palm (1979)
  • Lost Aviation Technology (1994)
  • என் மொழியின் கதை (2005)
  • The Story of my Language. (2005)

அடிக்குறிப்புகள்தொகு

  1. The ornamental design for a combination telescope and microscope

வெளி இணைப்புக்கள்தொகு