வீரன் (மதுபானம்)

வீரன் என்பது தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் விற்கப்படும் ஒரு சாதாரண வகை மதுபானமாகும். 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை 12 மதுபானங்களில் ஒன்று. இது பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசசு நிறுவன மது ஆலையில் தயாரிக்கப்படுகிறது.[1][2]

சர்ச்சைகள்

தொகு

இம்மதுவுக்கு வீரன் என்ற தமிழ்ப் பெயர் இருப்பதால் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. "குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கச் சொல்லும் காலம் போய் தற்பொழுது மதுபானத்திற்கு வீரன் என்று தமிழில் பெயர் வைத்திருக்கின்றனர்" என்று எம். ஆர். விஜயபாஸ்கர் அரசை விமர்சித்தார்.[3]

25 ஏப்ரல் 2024 அன்று ஈரோட்டில் சமூகநீதி மக்கள் கட்சியினர், "மதுவுக்கு வீரன் என்ற பெயர் வைத்திருப்பது எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளது என்றும், தமிழ்நாடு அரசு உடனடியாக வீரன் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர். "தமிழ்நாட்டில் பட்டியலினத்தவரில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வீரன் என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். ஒண்டிவீரன், மாவீரன் பொல்லான், மதுரை வீரன், வீரன் சுந்தரலிங்கம் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரில் வீரன் என்கிற அடையாளமுள்ளது. சிறப்புமிக்க இடத்தில் பயன்படுத்த வேண்டிய வீரன் என்ற பெயரை மதுவுக்கு வைத்துள்ளது பட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது" என்று சமூகநீதி மக்கள் கட்சித் தலைவர் வடிவேல் இராமன் கூறினார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. செய்திப்பிரிவு, இணையதள (2024-03-21). "வீரன்! டாஸ்மாக்கில் மலிவு விலைச் சரக்குகள் அறிமுகம்!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-05-10.
  2. "டாஸ்மாக் இறக்கும் நியூ லிஸ்ட்... மலிவு விலையில் ரெடியான மதுபானங்கள்... விற்பனை எப்போது தெரியுமா?". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2024-05-10.
  3. velmurugan.s. "குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க சொன்னால் சரக்கு பாட்டிலுக்கு தமிழில் பெயர் வைக்கிறார்கள்; முன்னாள் அமைச்சர்". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2024-05-11.
  4. WEB, PT (2024-04-25). "மதுபாட்டிலுக்கு 'வீரன்' பெயர் - "இது மக்களை இழிவுபடுத்துகிறது" என வலுக்கும் எதிர்ப்பு". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2024-05-11.
  5. "TASMAC: `வீரன்' மதுவுக்கு வலுக்கும் எதிர்ப்பு; தடை செய்ய எழும் கோரிக்கை - நடவடிக்கை எடுக்குமா அரசு?". விகடன். 2024-04-25. பார்க்கப்பட்ட நாள் 2024-05-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரன்_(மதுபானம்)&oldid=3953541" இலிருந்து மீள்விக்கப்பட்டது