வீரயுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன் வேள்பாரி, சு. வெங்கடேசன் எழுதிய வரலாற்றுப் புதின நூலாகும். இதனை ஆனந்த விகடன் தொடராக வெளியிட்டது. மக்களின் வரவேற்பினைப் பெற்ற இத்தொடர், விகடன் பதிப்பகத்தாரால் நூலாகவும் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு மணியம் செல்வன் ஓவியங்களை வரைந்துள்ளார்.[1]

வீரயுக நாயகன் வேள்பாரி
நூல் பெயர்:வீரயுக நாயகன் வேள்பாரி
ஆசிரியர்(கள்):சு. வெங்கடேசன்
வகை:வரலாற்றுப் புதினம்
துறை:வரலாறு
மொழி:தமிழ்
பக்கங்கள்:1408
பதிப்பகர்:விகடன் பிரசுரம், சென்னை
பதிப்பு:29 டிசம்பர், 2018

இந்நூல், வள்ளல் பாரியின் வரலாற்றைக் கூறும் புதினமாகும்.

வெளியீடு

தொகு

1408 பக்கங்களை இரண்டு பாகங்களாகக் கொண்ட இந்நூலினை மு.க.ஸ்டாலின் வெளியிட முதல் பாகத்தைத் தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனும் இரண்டாம் பாகத்தைத் சூழலியலாளர் கோ.சுந்தர்ராஜனும் பெற்றுக்கொண்டனர்.[2]

விருது

தொகு

மலேசியா டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் இந்நூலினை அனைத்துலக சிறந்த படைப்புக்கான நூலாக தோ்வு செய்துள்ளது.[3] 2018 ஆம் ஆண்டுக்கான ஆனந்த விகடனின் சிறந்த நாவலுக்கான விருது இந்நூலுக்கு வழங்கப்பட்டது.[4]

திரைப்படம்

தொகு

இந்நாவலை திரைப்படமாக எடுக்க முயற்சி நடைபெறுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. *முரளிதரன் காசிவிஸ்வநாதன் (14 செப்டெம்பர் 2018). "வேள்பாரி: 50 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த புனைக் கதைத் தொடர்". கட்டுரை. பிபிசி தமிழ்.
  2. *விகடன் டீம் (29 டிசம்பர் 2018). "`வேள்பாரி புத்தகமல்ல அது ஒரு புரட்சி' - மு.க.ஸ்டாலின் புகழாரம்!". கட்டுரை. விகடன். {{cite web}}: Check date values in: |date= (help); Cite has empty unknown parameter: |1= (help)
  3. *"MP's novel gets award from literary forum in Malaysia". The Hindu.
  4. "ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2018". விகடன். 8 சனவரி 2019.
  5. *"ஷங்கர் - சூர்யா காம்போவில் படமாகிறது 'வேள்பாரி' நாவல்?". கட்டுரை. இந்து தமிழ். 10 செப்டம்பர் 2022. {{cite web}}: Check date values in: |date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரயுக_நாயகன்_வேள்பாரி&oldid=3767299" இலிருந்து மீள்விக்கப்பட்டது