வீரேந்திர சிங்

வீரேந்தர் சிங் (Virender Singh)(பிறப்பு 7 அக்டோபர் 1954) என்பவர் இந்திய நீதிபதி மற்றும் ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.

தொழில் தொகு

சிங், ரோத்தக்கின் அரசுக் கல்லூரியில் தேர்ச்சி பெற்று, சகாரன்பூரில் உள்ள ஜே.வி. ஜெயின் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார்.  சிங் சூன் 1978 முதல் ரோத்தக்கில் பயிற்சியைத் தொடங்கினார். சிங் 1995-ல் அரியானாவின் துணை அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். சூலை 2 2002-ல் இவர் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதன் பிறகு 19 ஏப்ரல் 2007 அன்று ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். ஏப்ரல் 2012 முதல் 8 சூன் 2012 வரை ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். நீதிபதி சிங் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1 நவம்பர் 2014 அன்று பதவியேற்றார். பின்னர் அக்டோபர் 2016 அன்று ஓய்வு பெற்றார்.[1] சிங் பணி ஓய்வு பெற்ற பிறகு சனவரி 3, 2017 அன்று ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள் தொகு

  1. "Hon'ble The Chief Justice Virender Singh". jharkhandhighcourt.nic.in. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  2. "Former Jharkhand HC Chief Justice". பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  3. "Justice Virender Singh appointed AFT chairperson". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரேந்திர_சிங்&oldid=3638137" இலிருந்து மீள்விக்கப்பட்டது