வெடிமருந்து சதித்திட்டம்
1605ஆம் ஆண்டு வெடிமருந்து சதித்திட்டம் (Gunpowder Conspiracy) இங்கிலாந்து, இசுக்காட்லாந்து மன்னராட்சிகளின் அரசரான இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மற்றும் இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதியாகும். இது வெடிமருந்து தேசத்துரோகம் (The Powder Treason) எனவும் அழைக்கப்படுகின்றது.[1] கத்தோலிக்க குழுவொன்று நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல்நாள் நவம்பர் 5, 1605 அன்று இரண்டு அவைகளும் கூடும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை வெடிவைத்துத் தகர்க்கத் திட்டமிட்டனர். இது நிறைவேறியிருந்தால் அரசரும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த பல பிரபுக்களும் கொல்லப்பட்டிருப்பர்.
![]() 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதித்திட்டம் குறித்த அறிக்கை. | |
விவரங்கள் | |
---|---|
பங்குபெற்றோர் | இராபர்ட்டு கேட்சுபி, ஜான் ரைட்டு, தாமசு வின்டூர், தாமசு பெர்சி, கை பாக்சு, இராபர்ட்டு கீசு, தாமசு பேட்சு, இராபர்ட்டு வின்டூர், கிறிஸ்தோபர் ரைட்டு, ஜான் கிரான்ட்டு, அம்புரோசு ரூக்வுட், சேர் எவரார்டு டிக்பி, பிரான்சிசு திரெசாம் |
அமைவிடம் | இலண்டன், இங்கிலாந்து |
நாள் | நவம்பர் 5, 1605 |
முடிவு | தோல்வி, சதியாளர்கள் தண்டனை பெற்றனர் (குதிரையால் இழுத்துவந்து, தூக்கிலிடப்பட்டு நான்காக துண்டாடப்பட்டனர்) |
சதியாளர்கள் அரசக் குழந்தைகளைக் கடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.[2] இங்கிலாந்தின் நடுநிலங்களில் பரவலான புரட்சியை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
மேற்கோள்கள்தொகு
- ↑ Antonia Fraser, The Gunpowder Plot: Terror and Faith in 1605, London, 2002, Author's Note, pg. xv. ISBN 0-7538-1401-3
- ↑ Alice Hogge (2005), God's Secret Agents: Queen Elizabeth's Forbidden Priests and the Hatching of the Gunpowder Plot HarperCollins p.344