வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பெரிய மாரியம்மன் கோவில் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரில் அமைந்துள்ள ஒரு மாரியம்மன் கோவில் ஆகும்.
அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் |
அமைவிடம் | |
அமைவு: | வெண்ணந்தூர் , தமிழ்நாடு |
ஆள்கூறுகள்: | 11°30′49.0″N 78°05′20.3″E / 11.513611°N 78.088972°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | மாரியம்மன் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தமிழ் கட்டடக்கலை, கோயில் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | மறு கட்டுமானம் 1997 |
அமைவிடம்
தொகுபெரிய மாரியம்மன் கோவில் வெண்ணந்தூரில் 6வது வார்டு மாரியம்மன் கோவில் வீதியில், வெண்ணந்தூர்-சௌரிபாளையம் சாலையின் அருகில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.[1] கோவிலுக்கு வெளியே இடதுபறத்தில் கிணறு ஒன்று உள்ளது. பல வருடங்களாக அந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக இருந்து வந்தது. தற்போது இது கோவில் பயன்பாட்டிற்கு மட்டும் இருக்கிறது.
வரலாறு
தொகுபழைய ஆலயம் சுண்ணாம்பு சுதையால் கட்டப்பட்டது, கூரை செம்மண் ஓட்டால் ஆனது. முன் மண்டப திண்ணை கூரை ஓலை கீற்றால் ஆனது.பின் மூல அரூப கற்சிலையை அகற்றாமல் அதே இடத்தில் ஒரு கற்கோவில் ஏழுப்பப்பட்டது. கோவிலின் கோபுரம் பல வண்ண அழகிய சிற்பங்கள் சிமெண்ட்டால் உருவாக்கப்பட்டது.
தெய்வங்கள்
தொகுமூலவர் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கற்சிலையாக கிழக்குத்திசை நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளது. அருகில் கீழே, ஆதி மூலவர் அரூப சிலை அமைந்துள்ளது. இரு சிலைகளுக்கும் தினமும் அபிசேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடைபெறும். உர்சவ அம்மன் ஐம்பொன் சிலை திருவிழா மற்றும் விசேட நாட்களில் தேரில் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும்.
சிறப்பு வழிபாடு நடைபெறும் நாட்கள்
தொகு- பண்டிகை நாட்களில்
- அம்மாவாசை நாட்களில்
- பௌர்ணமி நாட்களில்
- புது வருட பிறப்பு நாட்களில்
- செவ்வாய், வெள்ளி நாட்களில்
- மழை வேண்டி நந்தா விளக்கு வைத்த நாட்களில்
திருவிழா
தொகுமாரியம்மன் பண்டிகை
தொகுஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவிழா பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும். நான்காவது வியாழக்கிழமை முக்கிய திருவிழா ஆகும்.[2] அப்பொழுது கோவில் வண்ணமயமான மின்ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்படும். ஊர் பொது மக்கள் அனைவரும் திருவிழா காலங்களில் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுவர். காப்பு கட்டப்பட்டதால் வெளியூர் செல்வதை தவிர்த்துவிடுவர்.
மாரியம்மன் பண்டிகை வெண்ணந்தூரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், பூபதி மாரியம்மன், செல்வ மாரியம்மன் ஆலையங்களில் ஒன்றாக நடைபெறும். இத் திருவிழாவுடன் சேர்த்து அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமரசாமி முருகன் பண்டிகை கொண்டாடப்படும்.
பண்டிகை நாட்களில் நிகழ்வுகள்
தொகு- சக்தி அழைத்தல்
ஊர் எல்லையில் உள்ள காவல் தெய்வம் சக்தியை குதிரையின் மேல் அழைத்து வரும் நிகழ்வு ஆகும்.
- கம்பம் எடுத்து ஆடுதல்
முதிர்ந்த வேப்ப மரத்தின் மூன்று கிளைகள் அமைந்த கிளை கம்பத்திற்கு தேர்வு செய்யப்படும். கிளையை வெட்டி எடுப்பதற்கு முன் அந்த வேப்ப மரத்திற்கு பூஜை செய்யப்படும். மூன்று கிளைகள் அமைந்த கம்பத்தை செதுக்கி அதன் மரபட்டையை எடுப்பர். சமன் செய்யப்பட்ட கம்பத்தின் மூன்று கிளைகளை மேல்நோக்கி கூராக்கப்படும். கம்பத்தின் முன்பக்க தண்டுப்பகுதியில் கைகூப்பி வணங்குவது போல ஒரு சிற்பம் செதுக்கப்படும். இது சிவனை குறிக்கும். ஊர் பொது கிணற்றில் ஊரவைத்துு பின் கம்பத்திற்கு மஞ்சள் பூசி பொட்டு வைத்து பூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பூஜை செய்யப்படும். இக்கம்பத்தை ஒரு குறிப்பிட்ட சமுகத்தினர் எடுத்து ஊரை சுற்றி கோவிலுக்கு ஆடி வருவர்.
- கம்பம் நடுதல்
கம்பத்தை எடுத்து ஆடி வரும்பொழுது ஊர் மக்கள் முளைப்பாரி, மாவிளக்கு, தீபம் ஏந்தி கோவிலை நோக்கி திரளாக வருவர். கோவிலை வலம் வந்து அம்மனுக்கும் கம்பத்திற்கும் மரியாதை செலுத்தி கம்பத்தை அதற்கான இடத்தில் பலிக்கு பின் நடப்படும்.
- தீ சட்டியை எடுத்து ஆடுதல்
பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் தீ சட்டியை எடுத்து பூசாரி மும்முறை வலம் வந்து அம்மன் எதிரே நடப்பட்ட கம்பத்தின் மூன்று கிளை நடுவே வைப்பார் அவர் தீ சட்டி எடுக்கும் போது தன் தோளில் சாட்டையை குறுக்காக அணிந்திருப்பார். இருதியில் பூஜை நடைபெற்று மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.
- தீ மிதித்தல்
வெண்ணந்தூர் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவில் தீ மிதித்தல் கிடையாது. ஆனால் பண்டிகையின் கடைசி மூன்று நாட்கள் காலையில் முதல் நாள் இரவு கம்பத்தின் மேல் வைக்கப்பட்ட தீ சட்டியை எடுத்து அதை கோவிலுக்கு எதிரே தரையில் கொட்டி அதை பக்தர்கள் மிதிப்பர் அப்பொழுது பூசாரி சாட்டையால் அவர்களை அடிப்பார். இதனால் உடல் பிணிகள் அகலும் என நம்பப்படுகிறது.
- பொங்கல் வைத்தல்
வியாழக்கிழமை அன்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறும். ஊர் பொது மக்கள், பக்தர்கள் அம்மனை வேண்டி திரளாக பொங்கல் வைத்து கொண்டாடுவர். சிலர் ஆடு,கோழி,சேவல் பலியிடடுவர்
- கம்பம் பிடுங்குதல்
வெள்ளியன்று ஆரவாரமில்லாமல் கம்பம் பிடுங்கி ஊர் கிணறு ஒன்றில் போட்டுவிடுவர்.
- மஞ்சள் நீராட்டம்
சனிக்கிழமையன்று மஞ்சள் நீராட்டம் மிக விமர்சையாக நடைபெறும்.உர்சவ அம்மன் ஐம்பொன் சிலை தேரில் வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படும். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மஞ்சள் கரைக்கப்பட்ட நீரை தெளித்து ஆரவாரம் செய்வர்.
- கலை நிகழ்ச்சிகள்
வண்டிவேடிக்கை, பூங்கரகம், பறை அடித்தல், குறவர் ஆட்டம், பச்சை காளி-பவள காளி ஆட்டம்[3], பட்டிமன்றம், ஆடல்-பாடல் நிகழ்ச்சி, சிறுவர்-சிறுமியர் கலை நிகழ்ச்சிகள், வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் பல கிராமிய நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறும்.
ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு பூஜை நடைபெறும். பூஜையின் போது பறை அடிக்கப்படும், பறை இசையால் அம்மன் மகிழ்ச்சி அடைவதாக நம்பப்படுகிறது.
மறு கட்டுமானம்
தொகுசுண்ணாம்பு சுதையால் ஆன கோவிலை கற்கோவிலாக 1997 ஆம் வருடம் கட்டிமுடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் உள்ளூர் மக்களின் பொருள் உதவியாலும் பண உதவியாலும் முலுமையடைந்தது. இருப்பினும் பல தடைகள் மற்றும் பல காரணங்களுக்காக கட்டுமான பணிகள் நிறைவடைய பல ஆண்டுகளாயின. கட்டுமான பணிகள் முடிந்ததும் கோவிலுக்கு குடமுழுக்கு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இது வெண்ணந்தூர் பொது மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதன் பின் 48 நாட்கள் சிறப்பு பூஜையான மண்டல பூஜை நடைபெற்று தினம் அன்னதானம் வழங்கப்பட்டது. தற்போது இக்கோயில் ஒரு சமூகத்தினரால் நிர்வகிக்கப்படுகிறது.
கோவிலை அடைதல்
தொகுதரைவழி
தொகு- வெண்ணந்தூர் காமராஜர் சிலை பேருந்து நிருத்ததில் இருந்தது தெற்கு நோக்கி சுமார் ஐநூறு மீட்டரில் ஆலையம் அமைந்துள்ளது. 51 ஆம் எண் அரசு பேருந்து ஆலையம் அருகில் நின்று செல்லும். வெண்ணந்தூர் வழியாக ராசிபுரத்திற்கும் இளம்பள்ளைக்கும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் மூலமாக 15ஆம் எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- வெண்ணந்தூருக்கு சேலத்தில் இருந்தது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் மூலமாக 51,33,13/40,40 எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- வெண்ணந்தூருக்கு ஆத்தூர், மேட்டூர் அணை, எடப்பாடி ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாடு போகுவரத்து கழகத்தின் மூலமாக பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- இது தவிர பல தனியார் பேருந்துகள் சேலம், ஈரோடு, இராசிபுரம், நாமக்கல், சங்ககிரி ஆகிய நகரங்களில் இருந்தது வெண்ணந்தூருக்கு இயக்கப்படுகிறது.
இரயில் வழி
தொகு- அருகில் உள்ள இரயில் நிலையம் மல்லூர் இரயில் நிலையம் (8கிமீ) ஆகும். இங்கு பயணிகள் இரயில் மட்டும் நிறுத்தப்படும். சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களிலிருந்து இந்த இரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து வெண்ணந்தூர் செல்லலாம்.
- ராசிபுரம் இரயில் நிலையம் 15கிமீ தொலைவில் உள்ளது.
- சேலம் சந்திப்பு 25கிமீ தொலைவில் உள்ளது
வான்வழி
தொகுசேலம் மற்றும் கோவை விமானநிலையம்